கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

13/55

எவ்வாறு மறைந்திருந்தது?

சுவிசேஷத்தின் பொக்கிஷங்கள் மறைந்திருப்பதாகச் சொல் லப்பட்டுள்ளன. தங்கள் பார்வைக்கு ஞானிகளாகத் தெரிய வர்களுக்கும், மாயையான தத்துவத்தின் போதனையால் கர்வம்பிடித்தவர்களும், மீட்பின் திட்டத்தினுடைய இரகசியத்தையும் அதின் அழகையும் வல்லமையையும் புரிந்து கொள்ள முடியாது. அநேகர் கண்கள் இருந்தும் காண்பதில்லை; செவிகளிருந்தும் கேட்பதில்லை; அறிவிருந்தும் மறைந்திருக்கிற பொக்கிஷத்தைப் புரிந்துகொள்வதில்லை. COLTam 100.4

பொக்கிஷம் மறைத்துவைக்கப்பட்டுள்ள நிலத்தின் மேல் ஒரு வன் நடந்து செல்லலாம். மிகவும்களைத்துப்போய் ஒரு மரத்தி னடியில் உட்காரலாம்; அதன் வேர்களுக்குள்தாம் ஐசுவரியங்கள் மறைந்திருக்கின்றன என்று அறியாமலிருக்கலாம். அப்படித்தான் யூதர்கள் இருந்தார்கள். சாத்தியமானது ஒரு தங்கப் புதையலாக எபிரெயர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பரலோகத்தின் தனிதன்மையோடு விளங்கிய யூத நிர்வாக அமைப்பை கிறிஸ்துதாமே ஏற்படுத்தியிருந்தார். அடையாளங் களிலும் மாதிரிகளிலும் மாபெரும் சாத்தியங்கள் மறைந்திருந்தன. ஆனாலும் கிறிஸ்து வந்தபோது, அந்த அடையாளங்களெல்லாம் அவரைத்தாம் சுட்டிக்காட்டினவென்று யூதர்கள் உணரவில்லை. தேவவார்த்தை அவர்களுடைய கரங்களில் இருந்தது; ஆனாலும், தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட பாரம்பரியங்களும், வேதவாக்கியங்களுக்கு மனிதர்கள் கொடுத்த விளக்கங்களும் கிறிஸ்துவைப்பற்றிய சத்தியத்தை அவர்களிடமிருந்து மறைத்தன. பரிசுத்த எழுத்துகளின் ஆவிக்குரிய அர்த்தம் புலப்படாமல் போனது . சகல அறிவுகளின் பொக்கிஷசாலை அவர்களுக்குத் திறந்திருந்தும், அவர்கள் அதை அறியாதிருந்தார்கள். COLTam 101.1

தேவன் தமது சத்தியத்தை மனிதர்களுக்கு மறைக்கவில்லை. தங்களுடைய போக்கால் தான் அதை தங்களுக்கு மறைத்துக் கொண்டார்கள். தாம் மேசியா என்பதற்கான ஏராளமான ஆதாரங்களை யூதர்களுக்கு கிறிஸ்து கொடுத்திருந்தார்; ஆனால் அவர்களுடைய வாழ்க்கை முற்றிலும் மாற வேண்டு மென அவருடைய போதனைகள் அழைத்தன. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், தாங்கள் போற்றி வந்த கோட்பாடுகளையும் பாரம்பரியங்களையும், சுயநலமும் பரிசுத்தமற்றதுமான தங்கள் நடவடிக்கைகளையும் தாங்கள் விடவேண்டியதிருக்கும் என்பதைக் கண்டார்கள். மாறாத, நித்திய சத்தியத்தை ஏற்றுக்கொள்ள தியாகம் அவசியமாயிருந்தது; எனவே, கிறிஸ்துவில் விசுவாசம் பெலப்படும்படி தேவன் கொடுத் திருந்த உறுதியான ஆதாரத்தை ஏற்க விரும்பவில்லை. பழைய ஏற்பாட்டு வாக்கியங்களை நம்புவதாகச் சொன்னார்கள்; ஆனாலும், கிறிஸ்துவின் வாழ்க்கை, குணம் குறித்து அங்கே சொல்லப்பட்டிருந்த சாட்சியை ஏற்க மறுத்தனர். தாங்கள் நம்பிவிட்டால், மனம்மாற வேண்டியதிருக்கும் என்றும், முன் அபிப்பிராய கருத்துகளை விடவேண்டியதிருக்கும் என்றும் பயந்தார்கள். சுவிசேஷத்தின் பொக்கிஷமும் வழியும் சத்தியமும் ஜீவனும் அவர்கள் மத்தியில் இருந்தது; ஆனால், பரலோகம் அனுப்பியிருந்த மாபெரும் ஈவைப்புறக்கணித்தார்கள். COLTam 101.2

‘ ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கை பண்ணா திருந்தார்கள்” என்று வாசிக்கிறோம். யோவான் 12:42. அவர்கள் இயேசுவை தேவனுடைய குமாரனென்று விசுவாசித்தார்கள். நன்றாக உணர்ந்திருந்தார்கள்; ஆனாலும் அவரைக் குறித்து அவ்வாறு அறிக்கையிடுவது அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்க ஒத்திருக்கவில்லை. பரலோகப் பொக்கிஷத்தைப் பெற்றுத்தந்திருக்கக்கூடிய விசுவாசம் அவர்களிடத்தில் காணப்பட வில்லை; உலகப்பொக்கிஷத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். COLTam 102.1

இன்றைக்கும் மனிதர்கள் உலகப் பொக்கிஷத்தைதான் ஆவலோடு தேடி வருகிறார்கள். சுயநலமான, எதிர்பார்ப்பு நிறைந்த எண்ணங்கள் அவர்களுடைய சிந்தையில் நிறைந்துள்ளன. உலகப் பிரகாரமான ஐசுவரியங்களையும் கனத்தையும் அல்லது அதிகாரத்தையும் பெறுவதற்காக, தேவனுடைய நிபந்தனைகளுக்கு மேலாக மனிதர்களுடைய நிபந்தனைகளையும் பாரம்பரியங்களையும் கோட்பாடுகளையும் உயர்த்துகிறார்கள். அவருடைய வார்த்தையின் பொக்கிஷங்கள் அவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளன. COLTam 102.2

“ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரிய வைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத் தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.” 1கொரி 2:14. COLTam 102.3

“எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறை பொருளாயிருக்கும். தேவ னுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசே ஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் 2கொரிந்தியர் 4:3,4. COLTam 102.4