கடைசிகாலச் சம்பவங்கள்
பரிசுத்தவான்களின் ஜெபங்களுக்கு பதில் அளிப்பதுபோல சாத்தான் பாவனை செய்வான்
சாத்தான் தனது வழக்கில் விரைவில் தோற்றுப்போகவிருப்பதைக் காண்கின்றான். இந்த உலகம் முழுவதையும் அவனால் துடைத்துப் போடமுடியாது. அவன் உண்மையான தேவப்பிள்ளைகளை வஞ்சகத்தினால் மேற்கொள்வதற்கு, ஆபத்தை பொருட்படுத்தாத கடைசி முயற்சியை எடுப்பான். அவன், கிறிஸ்துவைப்போல் தோற்றமெடுப்பதன்மூலம் இதைச் செய்வான். யோவானின் தரிசனத்திலே துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ள ராஜரீக வஸ்திரங்களைக்கொண்டு அவன் தன்னை உடுத்திக்கொள்வான். இப்படி செய்வதற்கு அவனுக்கு வல்லமை இருக்கின்றது. சத்தியத்தின் மேலுள்ள அன்பை ஏற்றுக்கொள்ளாமல், அநீதியில் (பிராமாணத்தை மீறுவதில்) பிரியப்படுகின்ற கிறிஸ்தவ உலகமாகிய, தனது வஞ்சிக்கப்பட்ட பின்னடியார்களுக்கு கிறிஸ்து இரண்டாம் முறை வருவதுபோல அவன் தோற்றமளிப்பான். கச 119.3
அவன் தன்னைக் கிறிஸ்து என்று அறிவிப்பான். கெம்பீர உடை அணிந்திருக்கும் அழகான கெம்பீரத் தோற்றமுள்ள ஒரு நபராகவும், மென்மையான குரல் மற்றும் இனிமையான வார்த்தைகளுடனும், இதுவரையில் எந்த ஒரு மனிதக் கண்களுமே கண்டிராத மிகச்சிறந்த மகிமையுடனும், அவன் கிறிஸ்துவாகவே நம்பப்படுவான். பின்பு, வஞ்சிக்கப்பட்டு ஏமாந்துபோயிருக்கின்ற அவனது பின்னடியார்கள், ” கிற்ஸ்து வந்துவிட்டார்! இரண்டாம் முறையாக் கிறிஸ்து வந்துவிட்டார்! அவர் இந்த உலகில் இருந்தபோது, எப்படித் தமது கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தாரோ, அப்படியே எங்களை ஆசீர்வாதித்தார்” என்று கூறி, ஒரு ஜெயதொனியோடு ஆர்ப்பரிப்பார்கள்… கச 119.4
ஆனால் பரிசுத்த்வான்களோ இதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களும் வஞ்சிக்கப்படுவார்களா? சாத்தானை அவர்கள் தெழுதுகொள்வார்களா? தூதர்கள் அவர்களைச் சுற்றிலும் இருக்கிறார்கள். “மேல்நோக்கிப் பாருங்கள்” என்ற தெளிவான, உறுதியான, இனிமையான ஒரு குரல் கேடகப்படும். கச 120.1
ஜெபித்துக்கொண்டிருக்கின்ற பிள்ளைகளுக்கு முன்பாக தங்கள் ஆத்துமா, கடைசியாக — நித்தியமாக இரட்சிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு நோக்கம் மட்டுமே அவர்களுக்கு இருந்தது. முடிவுபரியந்தம் நிலை நின்று இரட்சிக்கப்படுபவர்களுக்கு, அழிவில்லாத நித்திய வாழ்க்கை வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது — என்கின்ற இந்த நோக்கமே தொடர்ந்து அவர்கள்முன் இருந்த்து. ஆ! அவர்களது விருப்பங்கள் எத்தனை ஊக்கமும் ஆர்வமும் மிக்கவைகளாய் இருந்தன! நித்தியமும் நியாயத்தீர்ப்புமே எப்போதும் அவர்கள் பார்வையிலே இருந்தன. அவர்களது கண்கள் விசுவாத்தினாலே, வெள்ளை அங்கி தரித்து பிரகாசிக்கின்ற சிங்காசனத்திற்கு முன்பாக நின்றுகொண்டிருந்தவர்கள்மீது இருந்தது. இதுவே பாவத்திற்கு இடமளித்து, அதை அனுபவிப்பதிலிருந்து அவர்களைத் தடை செய்தது… கச 120.2
இன்னும் ஒரு அதிகப்படியான முயற்சி எடுக்கவேண்டியுள்ளது. அதன் பின்பு, சாத்தானுடைய கடைசி திட்டம் உபயோகப்படுத்தப்படும். தங்களை விடுவிப்பதற்காகக் கிறிஸ்து வரவேண்டும் என்ற இடைவிடாத கூக்குரலை அவன் கேட்டுக்கொண்டிருக்கின்றான். தங்களது ஜெபங்கள் கேட்கப்பட்டது என்று அவர்களை நினைக்கச் செய்யும்படி, கிறிஸ்துவைப் போல தோற்றமெடுத்து வருவதே அவனது இறுதியான தந்திரமுள்ள திட்டமாகும். — Ms 16, 1884. கச 120.3