கடைசிகாலச் சம்பவங்கள்
ஒவ்வொரு தனிப்பட்ட விதத்திலும் சாத்தான் கிறிஸ்துவைப்போலவே இருப்பான்
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் சாத்தானால் செய்ய இயலாது, ஆகவே, இங்குதான் அவன் வஞ்சகத்தின் துணையோடு, உண்மையிலேயே தன்னிடத்தில் இல்லாத வல்லமையைக்கொண்டு, போலியான கிரியையைச் செய்துகாட்டுவான். இரண்டாம் முறையாகக் கிறிஸ்துவே உலகத்திற்கு வந்திருப்பதுபோல, மனிதர்கள் நம்பக்கூடிய விதத்தில், கடைசி நட்களில் அவன் தோற்றமளிப்பான். உண்மையாகவே அவன் தன்னை ஒரு ஒளியின் தூதனாக மாற்றிக்கொள்வான். ஒவ்வொரு குறிப்பின்படியும் கிறிஸ்துவின் தோற்றத்தையே அவன் தாங்கி நிற்பான். வெறுமனே வெளித்தோற்றத்தின்படி பார்த்தால் அது ஒருவரையும் வஞ்சிக்காது. ஆனால் பார்வோனைப்போல சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறவர்கள் எளிதில் வஞ்சிக்கப்படுவார்கள். — 5T 698 (1889). கச 118.6
இந்த மாபெரும் வஞ்சக நாடகத்தின் உச்சக்கட்ட காட்சியாக, சாத் தானே கிறிஸ்துவைப்போல் வேடமணிந்து வருவான். சபை தனது நம்பிக்கைகள் நிறைவேற்றப்படும்படியாக, இரட்சகரின் வருகைக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கின்றது. இப்போது இந்த மாபெரும் வஞ்சகன், கிறிஸ்துதாமே வந்துவிட்டதுபோல் காண்பிப்பான். பூமியின் வெவ்வேறு பகுதிகளில், வெளியாகமத்தில்யோவான் வர்ணித்துள்ள தேவகுமாரனுடைய தோற்றத்தில், பிரகாசிக்கின்றி வெளிச்சத்தில் ஒரு கெம்பீரமான சிருஷ்டியைப்போல, மனிதர்கள் மத்தியிலே அவன் தன்னை வெளிப்படுத்துவான் (வெளி. 1:13-15). இதுவரையிலும், எந்தவொரு மனிதக் கண்களும் கண்டிராத மிகச்சிறந்த மகிமை அவனைச் சுற்றிலும் இருக்கும். “கிறிஸ்து வந்துவிட்டார்! கிறிஸ்து வந்துவிட்டார்!” என்று வெற்றி ஆர்ப்பரிப்பு காற்றிலே தொனிக்கும். கச 119.1
கிறிஸ்து இந்த பூமியில் இருந்தபோது, தமது கைகளை உயர்த்தி சீஷர்கள்மீது ஆசீர்வாதத்தைக் கூறியதுபோலவே, அவனும் தன் கைகளை உயர்த்தி அவர்கள்மீது ஆசீர்வாதத்தைக் கூறும்போது, மக்கள் அவனை வணங்கும்படி அவன் முன்பாகத் தாழ விழுந்து, பணிவார்கள். அவனது குரலானது மென்மையாகவும், தாழ்மையாகவும், இன்னும் இனிமை நிறைந்ததாகவும் இருக்கும். மிகவும் இதமான கருனை நிறைந்த குரலில், நமது இரட்சகர் கூறிய கிருபை நிறைந்த அதே பரலோக சத்தியங்ககள் சிலதைக் கூறுவான். மக்களின் வியாதிகளைக் குணமாக்குவான். பின்பு கிறிஸ்துவின் குணத்தைப்போன்ற பாவனையில், ஒய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிவிட்டதாகக் கூறி, தான் ஆசீர்வதித்த அந்த நாளை அனைவரும் பரிசுத்தப்படுத்தும்படி கட்டளையிடுவான். — GC 624 (1911). கச 119.2