கடைசிகாலச் சம்பவங்கள்
கூரன்பாங், நியு சவுத் வேல்ஸ் (Cooranbong, New South Wales)
ஆஸ்திரேலிய வேதாகமப் பள்ளி எங்கே நிறுவப்படவேண்டும்?... பள்ளிக்கூடங்கள், பட்டணங்களிலோ அல்லது அவற்றிலிருந்து ஒரு சில மைல்கள் தள்ளியோ நிறுவப்பட்டால், விடுமுறை நாட்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குதிரைப்பந்தயம், பந்தயம் கட்டுதல், பரிசுகள் வழங்குதல் போன்ற பழக்கவழக்கங்களை, மாணவர்களுக்கு அளித்திருக்கிற முந்தைய கல்வியின் செல்வாக்கிற்கு எதிர்த்து நிற்பது மிகவும் கடினமானதாயிருக்கும்… கச 74.1
நமது பள்ளிக்கூடங்களை நகரங்களைவிட்டு வெளியே, சற்று தொலைவில் நாம் ஸ்தாபித்து அவசியமாகக் காணப்படுகின்றது. ஆயினும், துன்மார்க்க இருளின் மத்தியில் ஜீவிப்பவர்களுக்கு நம் வெளிச்சம் பிரகாசிக்கப்படவோ, நகரவாசிகளிடம் தொடர்புகொள்ளவோ, அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்யவோ முடியாதபடிக்கு, நகரங்களை விட்டு வெகு தொலைவில் அமைக்கவேண்டாம். — FE 310, 313 (1894). கச 74.2
போக்குவரத்துக்கான பொதுவழிப் பாதையிலிருந்து நாம் வெகு தொலைவில் இருப்பதால், சவப்பெட்டிபோல ஒழுக்க இருளால் மூடப்பட்டிருக்கும் பெருநகரங்களுக்கு மத்தியிலே, நம் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு தருணம் கிடையாமல் போய்விடுமே என்ற உண்மையைத் தவிர, இடத்தைக்குறித்த மற்ற எல்லா காரியங்களும் சாதகமானதாக என் மனதைத் தொட்டன. இது ஒன்று மாத்திரமே, மறுப்பு தெரிவிக்கக்கூடியதாய் என் மனதுக்குத் தோன்றுகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், நமது எந்த ஒரு பெரிய நகரங்களிலும் நமது பள்ளிகளை ஸ்தாபிப்பது என்பது ஆலோசிக்கத் தகுந்த காரியமாய் இருக்காது. — 8MR 137 (1894). கச 74.3
பள்ளிக்கூடம் ஸ்தாபிக்க இந்த இடம்தான் சரியான இடம் என்று, முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு உணர்த்தப்பட்டேன். — 8MR 360 (1894) கச 74.4