கடைசிகாலச் சம்பவங்கள்

102/334

பெருநகரங்களுக்கு வெளியே நிறுவனங்களை ஏற்படுத்துங்கள்

தங்களது நோக்கங்களை வெளியில் பிரஸ்தாபப்படுத்தாதவர்களான ஆரோக்கியமான பகுத்தறிவுள்ள மனிதர்கள் நியமிக்கப்படட்டும். ஆயினும், நாட்டுப்புறப் பகுதிகளில் அப்படிப்பட்ட உடைமைகளை (நிலத்தை) அவர்கள தேடும்போது, நகரங்களுக்கு எளிதாக வந்து போகும் வசதியுடனும். பணியில் உள்ளவர்களுக்கு சிறிய பயிற்சிப் பள்ளிகள் நிறுவ ஏற்றதாக இருக்கவும்கூடிய இடத்தை அவர்கள் தெரிந்தெடுக்கட்டும். மேலும், சத்தியம் அறியாத இளைப்படைந்து நோயுற்ற ஆத்துமாக்களுக்கு, சிகிச்சை அளிக்கப் போதுமான வசதிகளை அளிக்கக்கூடிய விதத்திலும் அந்த இடங்கள் இருக்கட்டும். எங்கு, நமக்கு ஏற்றதான கட்டிடங்களை, நிலத்தின் சொந்தக்காரரிடம் ஒரு பரிசாகவோ அல்லது நமது ஜனங்களின் அன்பளிப்புகளைக்கொண்டு நியாயமான ஒரு விலைக்கோ வாங்கக்கூடுமானால், அப்படிப்பட்ட இடங்களைப் பெருநகரங்களுக்குச் சற்று வெளியே வாங்கும்படிப் பாருங்கள். இரைச்சல் நிறைந்த பட்டணங்களிலே கட்டடங்களை எழுப்பாதீர்கள். — Ev 77 (1909). கச 73.4