கடைசிகாலச் சம்பவங்கள்
தீவிரமாக சிந்திக்கும் காலம்
தேவனுக்குப் பயப்படுகின்ற ஒவ்வொருவரும், தேவனைத் தீவிரமாக பிரதிபலிக்கவேண்டிய நேரமும், தனிப்பட்ட பக்தியுணர்வு கொண்டிருக்க வேண்டிய நேரமும் ஒன்று உண்டென்றால், அது இந்த நேரமே. “நான் யார்? இந்த நேரத்தில் செய்யப்பட வேண்டிய என்னுடைய வேலையும் ஊழியமும் என்ன? நான் வேலை செய்துகொண்டிருப்பது கிறிஸ்துவினுடைய பக்கமா அல்லது எதிரியினுடைய பக்கமா?” - இப்படிப்பட்ட கேள்விகள் கண்டிப்பாக கேட்கப்படவேண்டும். தற்போது நாம் நிச்சயமாக பாவநிவாரணத்தின் மாபெரும் நாளில் வாழ்ந்து கொண்டிருப்பதால், ஒவ்வொரு ஆத்துமாவும், அது ஆணோ அல்லது பெண்ணோ, தற்போது தேவனுக்கு முன்பாக தன்னைத்தானே தாழ்மைப்படுத்தட்டும். ஒரு சிறிதளவு காலத்திற்கு தங்களது கல்லறைகளில் அவர்கள் உறங்கத்தக்கததாக, தற்போதுகூட அநேகருடைய வழக்குகள் மீண்டும் பார்க்கப்படும்படியாக தேவனுக்கு முன்பாகக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. உங்களது விருப்பங்களின் நிலை மாத்திரமே உத்தரவாதம் அளிக்குமே ஒழிய, விசுவாசத்தை கடைபிடிக்கின்றோம் என்ற உங்களது உரிமை கோருதல் அந்த நாளில் உத்தரவாதம் அளிக்காது. ஆத்தும ஆலயம் அதனுடைய தூய்மைக் கேட்டிலிருந்து சுத்தப்படுத்தப் பட்டிருக்கின்றதா? என்னுடைய பாவங்கள் அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றனவா? அவைகள் முற்றிலும் நீக்கப்படத்தக்கதாக தேவனுக்கு முன்பாக அவைகளுக்காக நான் மனம் வருந்துகின்றேனா? என்னை நானே முகவும் அற்பமாக மதிப்பிட்டுக்கொள்கின்றேனா? இயேசு கிறிஸ்துவை அறிகின்ற அறிவின் உயர்விற்காக நான் எந்த ஒரு தியாகத்தையோ அல்லது அனைத்தையும் தியாகம் செய்வதற்கு விருப்பமுள்ளவனாகவோ இருக்கின்றேனா? ஒவ்வொரு கணப்பொழுதும் நான் எனக்கு சொந்தமானவன் அல்ல, மாறாக கிறிஸ்துவினுடைய சொத்தாக இருக்கின்றேன் என்பதை உணர்கின்றேனா? என்னுடைய ஊழியம், நான் யாருடையவனாக இருக்கின்றேனோ அந்த தேவனுக்கே உரியது என்று சொல்லக்கூடியதாக இருக்கின்றதா? - Ms 87, 1886. கச 52.1
“எதற்காக நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்? எதற்காக வேலை செய்துகொண்டிருக்கின்றோம் அலை அனைத்தின் விளைவு என்னவாக இருக்கும்? என்று நம்மை நாமே நாம் கேட்க வேண்டும். - ST Nov. 21, 1892. கச 52.2