கடைசிகாலச் சம்பவங்கள்
ஏனோக்கின் முன்மாதிரி
ஏனோக்கு, மறுரூபமடைந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, முன்னூறு வருடங்கள் தேவனோடு நடந்தார். கிறிஸ்துவ குணம் பரிபூரணமடைவதற்கு, இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் அன்றைய உலகத்தின் நிலை அதிக அனுகூலம் இல்லாமல் இருந்தது. ஏனோக்கு எவ்வாறு தேவனோடு நடந்தார்? அவர், தேவனுடைய பிரசன்னத்திலே தான் எப்பொழுதும் இருப்பதாக உணரக்கூடிய விதத்தில், மனதையும் இருதயத்தையும் பயிற்றுவித்திருந்தார். மேலும் குழப்பமான வேலைகளில் தேவன் அவரை காத்துக் கொள்ளத்தக்கதாக, அவரது விண்ணப்பங்கள் மேலெழுபம்பும். கச 51.1
தன்னுடைய தேவனை துக்கப்படுத்தக்கூடிய எந்த ஒரு பாதையையும், அவர் எடுக்க மறுத்துவிட்டார். கர்த்தரைத் தனக்கு முன்பாக எப்பொழுதும் தொடர்ச்சியாக வைத்திருந்தார். “நான் தவறு செய்யாதபடிக்கு, உமது வழியை எனக்குப் போதியும். என்னைக்குறித்து உமது விருப்பம் என்னவாக இருக்கின்றது? என் தேவனே, உம்மை மகிமைப்படுத்த நான் என்ன செய்யவேண்டும்?” என்று ஜெபிப்பார். இப்படியாக அவர், தனது வழியையும் போக்கையும் தேவனுடைய பிரமாணங்களுக்கு ஏற்றவாறு, தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆண்டவர் தனக்கு உதவி செய்வார் என்று, தனது பரலோகத் தகப்பனிடத்தில் பரிபூரண விசுவாசமும் உறுதியான நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. தனக்கென்று சொந்த சித்தமோ அல்லது சிந்தையோ அவருக்கு இல்லாதிருந்தது. அவையனைத்துமே தனது பரம தகப்பனின் சித்தத்திலே மூழ்கடிக்கப்பட்டிருந்தது. கச 51.2
கிறிஸ்து வரும்போது பூமியின்மீது இருக்கின்றவர்களுக்கும், மரணத்தைக் காணாமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்படியாக மறுரூபமாக்கப்படுபவர்களுக்கும், ஏனோக்கு இப்பொழுது ஒரு பிரதிநிதியாக இருக்கின்றார். - 1SAT 32 (1886). கச 51.3
நமக்கு இருப்பதுபோலவே, ஏனோக்கிற்கும் சோதனைகள் இருந்தன. நம்மைச் சுற்றியிருக்கின்ற சமுதாயத்தைக்காட்டிலும், ஒருபோதும் நீதிக்கு நண்பனாக இல்லாத சமுதாயத்துடன் அவரும் சூழப்பட்டிருந்தார். அவர் சுவாசித்த சுற்றுச்சூழல் நம்முடையதைப் போலவே பாவத்தாலும் ஒழுக்கக்கேடுகளாலும் கறைப்படுத்தப்பட்டிருந்தது. இருந்தபோதும், அவர் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில், நடைமுறையில் இருந்த பாவங்களினால் அவர் கறைப்படுத்தப்படவில்லை. அதைப்போலவே, நாமும்கூட தூய்மையாகவும் கறைப்படுத்தப்படாதவர்களாகவும் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும். - 2T 122 (1868). கச 51.4
தேவனுடைய கடந்தகால ஆசீர்வாதங்களை நினைவிற்கொள் கச 51.5
நமது தற்போதைய நின்றுகொண்டிருக்கின்ற நிலைக்கு, ஒவ்வொரு முன்னேற்றமான அடியிலும் பிரயாணித்து வந்திருக்கின்ற நாம், நம்முடைய கடந்த கால வரலாற்றினை திரும்பிப்பார்க்கும்போது, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்றுதான் சொல்ல இயலும். கர்த்தர் செய்திருக்கின்ற காரியத்தை நான் காணும்போது, கிறிஸ்துவைத் தலைவராக வைத்திருக்கின்ற ஆச்சரியத்தாலும் நம்பிக்கையாலும் நிரப்பப்படுகின்றேன். நமது கடந்த கால சரித்திரத்தில், ஆண்டவருடைய போதனையையும், கர்த்தர் நம்மை நடத்தி வந்த விதத்தையும் மறந்தா லொழிய, எதிர்காலத்தைக்குறித்து பயப்படுவதற்கு நமக்கு ஒன்றுமே இல்லை. - LS 196 (1902). கச 51.6