கடைசிகாலச் சம்பவங்கள்
ஜெயங்கொள்ளும் சபை உண்மையாயும் கிறிஸ்துவைப் போன்றும் இருக்கும்
வேலை சீக்கிரமாய் முடிவுபெறப்போகின்றது. தங்களை உண்மையுள்ளவர்களென்று நிரூபித்த ஆவிக்குரிய போராட்டம் போராடுகின்ற சபை அங்கத்திர்கள்தான், வெற்றிபெருகின்ற சபையாக மாறுவார்கள். - Ev 707 (1892). கச 43.1
கிறிஸ்துவின் வாழ்க்கை, தேவனுடைய அன்பின் ஒரு தெய்வீக தூதினைக்கொண்டு நிரப்பப்பட்டிருந்த, கடைமை நிறைந்த ஒரு வாழ்க்கையாக இருந்தது. அந்த அன்பை அளவில்லாமல் மற்றவர்களுக்கு அளிப்பதற்கு அவர் தீவிரமான வாஞ்சையோடிருந்தார். அவரது முகத்திலிருந்து எப்பொழுதும் இரக்க உணர்ச்சி பிரகாசித்தது. அவரது நடத்தை கிருபையும் தாழ்மையும் உண்மையும் அன்பும் போன்ற குணவியல்புகளைக் கொண்டதாக இருந்தது. ஜெயம்பெறும் சபையில் இணைய விரும்புகின்ற ஒவ்வொரு அங்கத்தினரும், முதலாவது ஆவிக்குரிய போராட்டம் போராடிக்கொண்டிருக்கின்ற தேவனுடைய சபையில், இதேபோன்ற குணங்களை கட்டாயம் வெளிக்காட்ட வேண்டும். - FE 179 (1891). கச 43.2
*****