கடைசிகாலச் சம்பவங்கள்

58/334

போராடுகின்ற சபை குறைபாடுள்ளது

ஆவிக்குரிய போராட்டம் போராடிகொண்டிருக்கின்ற சபை வெற்றிபெற்ற சபையாக இல்லை. இந்த பூமியும் பரலோகமல்ல. தவறு செய்கின்ற மற்றும் குறைபாடுடைய ஆண்களைக்கொண்டும் பெண்களைக்கொண்டும், சபை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், அவர்கள் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்திலே பழக்குவிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு, இந்த வாழ்க்கைக்கும் பின்வரும் அழியாத ஜீவனுக்கென்றும் கற்றுக்கொண்டு வருகின்றார்கள். ST Jan. 4, 1883. கச 42.3

ஒரு சிலர் சபைக்குள் நுழைந்ததுமே தங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், தாங்கள் சந்திக்கிறவர்கள் அனைவருமே பரிசுத்தமும் பூரணமும் அடைந்தவர்களாய் இருப்பார்கள் என்றும் நினைக்கிறார்கள். ஆகவே, அவர்கள் சபை அங்கத்தினரிடம் குறைகளைக் காணும்போது, “தீயகுணம் கொண்டவர்களிடம் பழகக்கூடாது என்பதற்காகவே, உலகத்தை விட்டுவிட்டு இங்கே வந்தோம். ஆனால், இங்கேயும் தீமை இருக்கின்றது” என்று கூறுகின்றனர். மேலும் உவமையில் கூறப்பட்டுள்ள வேலைக்காரன்: “பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது?” என்று கேட்டது போன்று அவர்கள் கேட்கின்றார்கள். ஆனால், நாம் அப்படி நம்பிக்கை இழக்கவேண்டிய அவசிய மில்லை. ஏனெனில், சபை முழு நிறைவானதாயிருக்கின்றது என்று முடிவுக்கு வரத்தக்கதாக, கர்த்தர் நமக்கு ஒருபோதும் உத்தரவாதம் கொடுக்கவில்லை. நம்முடைய அனைத்து வைராக்கியமும் போராடிக்கொண்டிருக்கும் சபையை பரிசுத்தமான ஜெயம்பெற்ற சபையாக உருவாக்குவதில் வெற்றியுடையதாய் இராது. - TM 47 (1893). கச 42.4