கடைசிகாலச் சம்பவங்கள்

40/334

ஏழாம்நாள் அட்வென்டிஸ்டுகளின் தனித்தன்மை வாய்ந்த ஊழியம்

கர்த்தர் தமது பிரமாணத்தின் களஞ்சியங்களாக, நம்மை ஏற்படுதியிருக்கின்றார். உண்மையான எச்சரிப்புகளுடனும், கடிந்து கொள்ளுதலுடனும், ஊக்கத்துடனும், மற்றவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய புனிதமான நித்திய சத்தியத்தை அவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றார். - 5T 381 (1885). கச 31.4

ஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகள், தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு ஜனக் கூட்டமாக, உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்களாக, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றார்கள். சத்தியம் என்னும் மாபெரும் சம்மட்டியைக்கொண்டு, அவர்களை உலகமாகிய கல்சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்து, தன்னுடனான தொடர்புக்குள்ளாக கொண்டுவந்திருக்கிறார். அவர்களைத் தமது பிரதிநிதிகளாக ஏற்படுத்தி, இரட்சிப்பின் கடைசி ஊழியத்தில் தமது தூதுவர்களாக இருக்கும்படி அவர் அழைத்திருக்கிறார். அழிவுக்குரியவர்களிடம் நம்பிக் கொடுக்கப்பட்டவைகளிலேயே மகா பெரிதான சத்தியத்தின் பொக்கிஷமும், தேவனால் மனிதனுக்கு அனுப்பட்டவைகளிலேயே மிகவும் பக்தி விநயமான மற்றும் அஞ்சத் தகுந்ததுமான எச்சரிப்புகளும், உலகத்திற்குக் கொடுக்கப்படும்படி அவர்களிடம்தான் ஒப்படைக்கப்ட்டிருக்கின்றது. - 7T 138 (1902). கச 31.5

விசேஷித்தவிதமாக ஏழாம்நாள் அட்வென்டிஸ்டுகள், உலகத்தில் காவற்காரர்களாகவும் ஒளிகாட்டுகிறவர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அழிந்துகொண்டிருக்கின்ற உலகத்திற்கான கடைசி எச்சரிப்பு, அவர்களிடம்தான் நம்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்தையிலிருந்து ஆச்சரியமான ஒளி, அவர்கள்மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தூதர்களுடைய தூதுகளை பறைசாற்றவேண்டிய, மிகவும் பக்திவிநயமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு பணி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணி வேறொன்றுமில்லை. அவர்களது கவனத்தைத் திசைத்திருப்பக்கூடிய வேறொன்றையும் அவர்கள் அனுமதிக்கக்கூடாது. -9T 19 (1909). கச 32.1