கடைசிகாலச் சம்பவங்கள்

39/334

அவர்களது “சிறப்பு அடையாளமான” வேதாகம உபதேசங்கள்

1844-ல் கடந்துபோய்கொண்டிருந்த நேரம், பரலோகத்தில் நிகழ்வுறுகின்ற பரிசுத்தஸ்தல சுத்திகரிப்பின் காரியமும், பூமியின்மீதுள்ள தேவனுடைய ஜனங்களின் உறவைத் தீர்மானிக்கின்ற காரியமும் திகைப்புற்ற நமது கண்களைத் திறக்கின்றதான மாபெரும் நிகழ்வுகளின் ஒரு காலகட்டமாயிருந்தது. அதனோடு, முதலாம் இரண்டாம் தூதர்களுடைய தூதுகளும், “தேவனுடய கற்பனைகளும் இயேசுவின் விசுவாசமும்” என்று பொறிக்கப்பட்டிருந்ததான கொடியை விரித்துக் காண்பித்த மூன்றாம் தூதனுடைய தூதின் காரியமும்கூட, திகைப்புறச் செய்கின்ற நமது கண்களைத் திறக்கின்றதான மாபெரும் நிகழ்வுகளின் ஒரு காலகட்டமாயிருந்தது. அவரது சத்தியத்தை நேசிக்கும் ஜனங்களால் பரலோகத்தில் இருப்பதாகக் காணப்பட்ட தேவனுடைய ஆலயமும், தேவனுடைய பிரமாணம் அடங்கிய பெட்டியுமே, இந்தத் தூதின்கீழாக இருந்த சிறப்பு அடையாளங்களில் ஒன்றாக இருந்தது. நான்காம் பிரமாணமான ஓய்வுநாளின் வெளிச்சம், தேவனுடைய பிரமாணத்தை மீறுகிறவர்களின் பாதையில் தனது பலமான ஒளிக்கதிர்களை வீசியது. துன்மார்க்கரின் அழியும்தன்மை, ஒரு சிறப்பான பூர்வ அடையாளமாகும். பூர்வ சிறப்படையாளங்கள் என்ற தலைப்பின் கீழ் இதற்குமேலாக என்னால் வேறெதையும் நினைவிற்குக் கொண்டுவர இயலவில்லை. - CW 30, 31 (1889). கச 31.3