கடைசிகாலச் சம்பவங்கள்

313/334

நித்திய இளமையின் ஆற்றல்

கல்லறையிலிருந்து வெளியே வந்த அனைவரும், கல்லறைகளுக்குள் சேர்ந்தபோது இருந்த அதே வளர்த்தியிலேயே இப்பொழுதும் இருந்தார்கள். உயிர்தெழுந்தவர்களின் கூட்டத்தின் மத்தியில் நின்ற ஆதாம், மற்ற அனைவரைக்காட்டிலும் அதிக உயரமாகவும், கெம்பீரத் தோற்றத்துடனும். அதே நேரம் தேவ குமாரனைக் காட்டிலும் உயரத்தில் சற்றுக் குறைவாகவும் காணப்பட்டான். அவனுடைய உயரமும், கெம்பீரமான தோற்றமும். அவனுக்குப் பின்பாக வந்த சந்ததியாருடையதிலிருந்து மிகவும் மாறுபட்டதாய் இருந்தது. இந்த ஒரு காரியத்திலிருந்து, மனித இனம் பாவத்தின் காரணமாக எவ்வளவு பலங்குன்றிப் போய்விட்டிருந்தது என்று காட்டப்படுகின்றது. என்றபோதும், நித்திய இளமையின் ஆற்றலோடும், புதுமலர்ச்சியோடும் அனைவரும் உயிர்த்தெழுந்தனர்... வெகுகாலமாக இழந்துபோயிருந்த ஏதேன் தோட்டத்தின் ஜீவவிருட்சத்தை மீண்டும் கிடைக்கப்பெற்று, மானிட இனத்தின் தொடக்ககால மகிமையின் ஒரு முழுவளர்ச்சிக்கு ஈடாக மீட்கப்பட்டவர்கள் “வளருவார்கள்” (மல். 4:2). — GC 644,645 (1911). கச 212.3

ஆதாமுக்கு சிருஷ்டிப்பின்போது இருபது மடங்கு உயிராற்றல் அருளப்பட்டிராதிருந்தால், இயற்கைப் பிரமாணங்களை மீறுகிற தற்போதைய வாழ்வுமுறைப் பழக்கவழக்கங்களுடன்கூடிய மனித இனம் இல்லாமலேபோயிருந்திருக்கும். — 3T 138 (1872). கச 212.4

இளைப்பாறுதலை விரும்புவோரும், இளைப்பாறுதல் தேவைப்படுவோரும் அங்கே இல்லை. தேவனுடைய சித்தத்தை செய்வதிலும், அவரது நாமத்தைத் துதித்துக்கொண்டிருப்பதிலும் களைப்பு என்பதே அங்கு இருக்காது. விடியற்காலையின் உற்சாகம் எப்பொழுதும் இருக்கும்; அது ஒருபோதும் ஒரு சிறிதும் குறையாது... அதிக அறிவாற்றல் பெறுவதால், நம் மனம் களைப்படைவதுமில்லை, சக்தியை இழந்து சோர்ந்துபோவதும் இல்லை. — GC 676, 677 (1911). கச 212.5

பரலோகம் முழுவதும் ஆரோக்கியம் நிறைந்த இடமாகும். — 3 T 172 (1872). கச 212.6