கடைசிகாலச் சம்பவங்கள்

312/334

பூக்கள், பழங்கள் மற்றும் மிருகங்கள்

அனைத்துவிதமான பூக்களால் நிறைந்த மற்றொரு வயல்வெளியை நான் கண்டேன். அப்பூக்களை நான் பறித்தபோது, “இவைகள் ஒருக்காலும் வாடிப்போவதில்லை” என்று சத்தமிட்டேன். பின்னர் காண்பதற்கு மிகவும் பேரழகாயிருந்த, நீண்ட புல் நிறைந்த ஒரு வயல்வெளியைக் கண்டேன். அது, பசுமையான பச்சை நிறமுள்ளதாக இருந்தது. இயேசு ராஜாவின் மகிமைக்கு அந்த பச்சைப் புற்கள் பெருமிதத்துடன் அசைந்தாடும்போது, அது பொன்னையும் வெள்ளியையும் பிரதிபலிப்பைப்போன்று காணப்பட்டது. பின்பு, எல்லாவிதமான மிருகங்களும் நிறைந்த, ஒரு வயல் வெளிக்குள்ளாக நாங்கள் நுழைந்தோம். அதிலே சிங்கம், ஆட்டுக்குட்டி, சிறுத்தை, ஓநாய் போன்ற அனைத்து மிருகங்களும் ஒருமித்து சமாதானமாக இருந்தன. அவைகளின் நடுவாக நாங்கள் கடந்து சென்ற போது, அவைகள் அமைதியாய் எங்களைப் பின்தொடர்ந்து வந்தன. கச 211.5

பின்னர் நாங்கள் ஒரு காட்டினுள் நுழைந்தோம். அவை, இங்கே நாம் பார்க்கும் இருண்ட காடுகளைப்போல் இல்லை; இல்லவே இல்லை; மாறாக, வெளிச்சமாகவும், எங்கும் பேரழகாகவும் காணப்பட்டன. அங்கிருந்த மரங்களின் கிளைகள் அங்குமிங்கும் காற்றில் ஆடியசைந்தன. “இந்த வனாந்தரத்தில் பாதுகாப்பாகத் தங்கி, இந்தக் காடுகளில் நித்திரை செய்வோம்” என்று நாங்கள் அனைவரும் உரத்த சத்தமிட்டோம். சீயோன் மலைக்குப் போகும் வழியில் இந்தக் காடுகளைக் கடந்து சென்றோம். கச 211.6

அந்த மலையின்மீது மகிமையான ஒரு ஆலயம இருந்தது... அங்கே ஆலயத்தைச் சுற்றிலும் அந்த இடத்தை அலங்கரிப்பதற்காக வேலிச்செடிகள், வேவதாரு மரங்கள், ஊசியிலை மரங்கள், எண்ணெய் மரங்கள், நறுமன மலச்செடிகள், மாதுளை மரங்கள் போன்ற அனைத்துவிதமான மரங்களும் இருந்தன. அத்திமரம் தன் காலத்திற்கேற்ற பலனைத் தரும் அதன் கனிகளின் பளுவினால் கீழ்நோக்கி தாழ்ந்திருந்தது. இந்த மரங்கள் அந்த இடத்தை மகிமையால் நிறையச் செய்திருந்தன... கச 212.1

அங்கு சுத்த வெள்ளியாலான ஒரு மேசையை நான் கண்டேன்; அது அநேக மைல்கள் நீண்டதாயிருந்தபோதும், எங்கள் கண்களால் அதன் கடைசி முனைவரை காண முடிந்தது. ஜீவவிருட்சத்தின் கனி, மன்னா, வாதுமைகள், அத்திப்பழங்கள், மாதுளைப்பழங்கள். திராட்சைப்பழங்கள் மற்றும் அநேகக்கனி வகைகளையும் நான் கண்டேன். நான் அந்தக் கனியை உண்பதற்கு என்னை அனுமதிக்குமாறு இயேசுவிடம் கேட்டேன். — EW 18, 19 (1851). கச 212.2