கடைசிகாலச் சம்பவங்கள்

310/334

விவரிக்க முடியாத மகிமை

இயேசுவின் மிகையான அழகையும் மகிமையையும் நான் கண்டேன். நடுப்பகலின் சூரியப் பிரகாசத்தைக்காட்டிலும் அவருடைய முகத்தோற்றம் பிரகாசமாயிருந்தது. அவருடைய வஸ்திரம் வெண்மையிலும் வெண்மையான வெண்ணிறமாயிருந்தது. பரலோகத்தின் மகிமைகளையும், பத்து நரம்புகள்கொண்ட தங்களது இசைக்கருவியை மீட்டிப் பாடுகின்ற அழகான தூதர்களையும்... பற்றி நான் உங்களுக்கு எப்படி விவரித்துக் கூறுவேன்! — Letter 3, 1851. கச 210.4

அங்கு நான் பார்த்த அற்புதமான காரியங்களை என்னால் விவரித்துச் சொல்ல இயலாது. ஆ! பரலோகக் கானானின் மொழியைப் பேச நான் அறிந்திருந்தேனானால், அப்பொழுது மேலான அவ்வுலகத்தின் மகிமையைக் குறித்து, ஒரு சிறிதளவு நான் சொல்ல இயலும். — EW 19 (1851). கச 210.5

பரலோகத்தைக்குறித்த ஒரு விளக்கத்தைக் கொடுக்க முயல்வதற்கு, மொழி முற்றிலும் மிக அற்பமானதாக இருக்கின்றது. அக்காட்சிகள் என் முன்பாக எழும்பும்போது, நான் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகின்றேன். மிகச்சிறந்த அதன் பிரகாசத்துடனும், மிக உன்னத மகிமையுடனும் நான் கொண்டுசெல்லப்படும்போது, என் எழுதுகோலை கீழே வைத்துவிட்டு, ” ஆ! என்ன அன்பு! என்ன ஆச்சரியமான அன்பு!” என்று வியந்து கூறுகின்றேன். மிகவும் சிறப்புவாய்ந்த மொழிகூட, பரலோகத்தின் மகிமையான அல்லது இரட்சகருடைய ஒப்பிடமுடியாத ஒரு அன்பின் ஆழத்தை விவரிப்பதில் தோற்றுப்போகின்றது. — EW 289 (1858). கச 210.6

நீதிமான்களின் பலனைக்குறித்து விவரிப்பதற்கு மானிட மொழி போதாது. அதை நோக்கிப் பார்க்கிறவர்களுக்கு மாத்திரமே, அதன் மேன்மை புலப்படும். தேவனுடைய பரலோக மகிமையை எல்லைக் குட்பட்ட எந்த மனமும் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாது. — GC 675 (1911). கச 211.1

பரலோகப் பட்டணத்தின் மகிமையை ஒரே ஒரு முறை நாம் பார்த்திருந்தோமானால், மீண்டுமாக இந்த பூமியில் வசிக்க ஒருபோதும் நாம் விரும்பமாட்டோம். — ST April 8,1889. கச 211.2