கடைசிகாலச் சம்பவங்கள்
உண்மையான தொட்டு உணரத்தக்கதான ஓர் இடம்
அவர்கள் சார்பாக மன்றாடுவதற்கு, பரலோகத்தில் அவர்களுக்கென்று ஒரு நண்பர் இருந்திருக்கிறார் என்பதை சீடர்கள் அறியும்போது, அவர்கள் மகிழ்ச்சிக்கு அது எப்படிப்பட்ட ஒரு மூலகாரணமாய் இருக்கும்! தங்கள் கண்களுக்கு முன்பாகக் கிறிஸ்து பரமேறிச்சென்ற காரியத்தின் மூலமாக, பரலோகத்தைக்குறித்து அவர்கள் கொண்டிருந்த பார்வையும் எண்ணமும் மாற்றப்பட்டன. இதற்கு முன்பாக, பரலோகம் என்பது எல்லயற்ற பரந்துகிடக்கின்ற ஒரு வெற்றிடம் என்றும், அங்கே சரீரமில்லாத ஆவிகள்தான் வாசமாயிருக்கின்றன என்றும் எண்ணியிருந்தனர். ஆனால் இப்பொழுதோ தாங்கள் நேசித்தவரும், எல்லாருக்கும் மேலாக கனம் பண்ணப்பட்டவரும், தாங்கள் பேசிக்களித்தவரும், உடன் பிரயாணம் சென்றவரும், அதிலும் உயிர்த்தெழுந்த சரீரத்தோடு தங்களை நடத்தின வருமான, இயேசுவைப் பற்றின சிந்தையோடு பரலோகம் இணைக்கப்பட்டிருந்தது. கச 209.5
அதன்பின்பு, ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத, நிச்சயமில்லாத, தொட்டு அறியமுடியாத ஆவிகளால் நிறைந்த இடமாக பரலோகம் அவர்களுக்குத் தோன்றவில்லை. தங்களது அன்பான மீட்பரால் தங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிற வாசஸ்தலங்களை, தங்களது எதிர்கால வீடாகவே அவர்கள் இப்பொழுது பார்க்க ஆரம்பித்தார்கள். — 3SP 262 (1878). கச 210.1
எதிர்கால சுதந்திரத்தை (பரலோகத்தை) அடைவதைக்குறித்த ஒரு பயம் அநேகரிடத்தில் காணப்படுகிறது. அது சத்தியங்களை மிதமிஞ்சின விதத்தில் எண்ணச்செய்து, அந்த சுதந்திரத்தை அடைவது கூடாத காரியம் என்பதுபோல் நினைக்க அவர்களை வழிநடத்துகிறது. மாறாக, சத்தியங்களோ பரலோகத்தை நமது இல்லமாகக் காண்பதற்கு நம்மை நடத்துகிறது. பிதாவின் வீட்டிலே சீஷர்களுக்காக வாசஸ்தலங்களை ஆயத்தஞ்செய்ய தாம் செல்வதாக, கிறிஸ்து அவர்களுக்கு உறுதிகூறினார். — GC 674, 675 (1911). கச 210.2
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஆதியில் மகிழ்ச்சியைக் கொடுத்த அந்த வேலைகளிலும் இன்பங்களிலுந்தான், புதிய பூமியில் மீட்கப்பட்டவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். தோட்டத்திலும் வயல்வெளியிலுமாயிருந்த ஏதேனும் வாழ்க்கையை மீண்டும் வாழ்வார்கள். — PK 730, 731 (c.1914). கச 210.3