கடைசிகாலச் சம்பவங்கள்

300/334

சமுத்திர ஆழங்களிலிருந்தும், சுரங்கங்களிலிருந்தும், மலைகளிலிருந்தும்

தமக்கு உண்மையாயிருந்தவர்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள கிறிஸ்து வரும்போது, கடைசி எக்காளம் தொனிக்கும். மிக உயர்ந்த மலைகளின் உச்சியிலிருந்து, பூமியின் மிக ஆழமான சுரங்கங்களின் மிகத்தாழ்வான இடங்கள் வரையுள்ள, பூமி முழுவதும் அந்தச் சத்தத்தைக் கேட்கும். மரித்த நீதிமான்கள் அந்தக் கடைசி எக்காள சத்தத்தைக் கேட்டு, அழியாமையைத் தரித்துக்கொண்டு தங்கள் கர்த்தரைச் சந்திக்கும்படியாக, தங்கள் கல்லறைகளிலிருந்து எழும்பி வருவார்கள்.- 7BC 909 (1904). கச 204.3

பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், மலையடியிலுள்ள பெரிய குகைகளிலிருந்தும், பாதாள அறைகளிலிருந்தும், பூமியின் குகைகளிலிருந்தும், தண்ணீர்களின் ஆழத்திலிருந்தும் வரப்போகின்ற நீதிமான்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து நான் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கின்றேன். ஒருவர்கூட கவனிக்கப்படாதபடி விட்டுவிடப்படமாட்டார்கள். ஒவ்வொருவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தவர்களாயும் ஜெயங்கொண்டவர்களாயும் எழும்பிவருவார்கள். — Letter 113, 1886. கச 204.4

ஜீவனை அளிப்பவராகிய கிறிஸ்து, மரித்தோரை அழைக்கும்போது (சுவிட்சர்லாந்திலுள்ள) இந்த மலைகளும், குன்றுகளும், அவர்களை வெளிக்கொண்டுவந்து காட்டும் ஒரு காட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்! அவர்களது சரீரங்கள் புதைக்கப்பட்டிருந்த பெரும் குகைகளிலிருந்தும், பாதாள அறைகளிலிருந்தும், ஆழமான கிணறுகளிலிருந்தும் அவர்கள் வருவார்கள். — Letter 97, 1886. கச 204.5