கடைசிகாலச் சம்பவங்கள்
குகைகளிலிருந்தும், மறைவுகளிலிருந்தும், பாதாள அறைகளிலிருந்தும்
மலைகளின் அரணிப்பான இடங்களிலும், குகைகளிலும், பூமியின் தாழ்விடங்களிலும், இரட்சகர் தமது பிரசன்னத்தையும் மகிமையையும் வெளிப்படுத்துவார். கச 203.4
இன்னும் கொஞ்சக்காலந்தான், வருகிறவர் சீக்கிரத்தில், வருவார், தாமதம்பண்ணார். அக்கினிஜீவாலை போன்ற அவரது கண்கள், பாதுகாப்புமிக்க சிறையறைகளையும் ஊடுருவிச் சென்று, அங்கே மறைக்கப்பட்டிருக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். ஏனெனில், அவர்களது நாமங்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன, இரட்கரின் கண்கள் நம்மீது பதிந்திருக்கின்றன, நம்மைச்சுற்றிலும் இருக்கின்றன, ஒவ்வொரு கஷ்டத்தையும் கூர்ந்து கவனிக்கின்றன, ஒவ்வொரு ஆபத்தையும் பகுத்தறிகின்றன; அவரது கண்கள் ஊடுருவக்கூடாத இடமே இல்லை, கிறிஸ்துவின் அனுதாபம் அவரது ஜனங்களை சென்றடைய முடியாத வருத்தங்களும் கடுந்துன்பங்களும் இல்லை… கச 203.5
இயேசு கிறிஸ்துவின் கெம்பீரத் தோற்றத்தைக் காணும்போது தேவனுடைய பிள்ளை முதலில் மிகவும் பயமடைந்தவான். தேவனுடைய பரிசுத்த பிரசன்னத்தில், தான் ஜீவிக்க முடியாது என்று உணர்கின்றான். ஆனால், யோவானிடம் சொல்லப்பட்ட “பயப்படாதே” என்ற அதே வார்த்தை அவனிடத்திற்கும் வரும். இயேசு தமது வலது கரத்தை யோவான்மீது வைத்து, தாழ விழுந்துகிடந்த அவனது நிலையிலிருந்து அவனைத் தூக்கினார். அவ்வண்ணமே தம்மை விசுவாசிக்கின்ற உண்மையான பிள்ளைகளுக்கும் அவர் செய்வார். —TMK 360, 361 (1886). கச 204.1
தேவனுடைய சுதந்தரவாளிகள் இடுக்கமான மேலறைகளிலிருந்தும், அழுக்கடைந்த தொழுவங்களிலிருந்தும், பாதாள அறைகளிலிருந்தும், தூக்குமேடைகளிலிருந்தும், மலைகளிலிருந்தும், வனாந்தரங்களிலிருந்தும், பூமியின் குகைகளிலிருந்தும், கடலுக்குள் உள்ள பொந்துகளிலிருந்தும் வந்திருப்பார்கள். — GC 650 (1911). கச 204.2