கடைசிகாலச் சம்பவங்கள்
விவரிக்க இயலாத அளவிற்கு பயங்கரம்
நமக்கு முன்பாக இருக்கின்ற கடுந்துயரமும், வருத்தமும் நிறைந்த காலத்தைக் கடந்து வருவதற்கு, சோர்வையும், தாமதத்தையும், பசியையும் சகித்துக்கொள்ளக்கூடிய ஒரு விசுவாசம் - எவ்வளவுதான் கடுமையாக சோதிக்கப்பட்டாலும் துவண்டுபோகாத ஒரு விசுவாசம் நமக்கு அவசியமாக இருக்கின்றது… கச 186.1
“இதுவரைக்கும் உண்டாயிராத இக்கட்டுக்காலம்” நம்மீது விரைவில் வரவிருக்கின்ரது; அச்சமயத்தில், இப்பொழுது நாம் பெற்றிராததும் பெற்றுக்கொள்ள அநேகர் மிகவும் சோம்பலாயிருக்கின்றதுமான ஒரு அனுபவத்தை நாம் கொண்டிருக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது. உபத்திரவம் நடைபெறுவதைவிட, அதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பது உண்மையிலேயே அதிக உபத்திரவமாக இருக்கும்; ஆனால் நமக்கு முன்பாக இருக்கும் நெருக்கடியைக் குறித்த காரியத்தில் அது உண்மையல்ல. மிகத் தெளிவாகக் கொடுக்கப்படும் விளக்கங்கூட, அந்த கடுமையான உபத்திரவத்தை முழுவதுமாக விளக்க முடியாது. — GC 621, 622 (1911). கச 186.2
இயேசு கிறிஸ்து மகா பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு வெளியேறும்போது, இதுவரை அதிகாரிகளிடமும் மக்களிடமிருந்த, கட்டுப்படுத்துகின்ற அவரது ஆவியானவர் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். எனவே அதிகாரிகளும், மக்களும் தீய தூதர்களின் கட்டுப்பாட்டிற்குள்ளாக விட்டுவிடப்படுவார்கள். அப்போது, சாத்தானுடைய ஆலோசனை மற்றும் வழிமுறைகளின் மூலமாக, பயங்கரமான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. காலம் மாத்திரம் குறக்கப்படாதிருக்குமானால், ஒருவருமே உயிரோடிருக்காதபடிக்கு அழிக்கப்பட்டுப்போவார்கள். — 1T 204 (1859). கச 186.3