கடைசிகாலச் சம்பவங்கள்
தங்கள் முன்பாக இருக்கின்ற சோதனை நேரத்துக்கு தேவனுடைய ஜனங்கள் ஆயத்தப்பட்டிருப்பர்
மூன்றாம் தூதனின் தூது முடிவடையும்போது, பாவம் நிறைந்த புமியின் குடிகளுக்காக, இரக்கம் இனி ஒருபோதும் பரிந்துபேசாது. தேவனுடைய ஜனங்கள் தங்களது வேலையை நிறைவேற்றி முடித்திருந்தனர். அவர்கள் “கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலையும்” “பின்மாரியையும்” பெற்றுத் தங்களுக்கு முன்பாக உள்ள சோதனை நேரத்திற்கு ஆயத்தப்பட்டிருந்தனர். கச 185.2
பரலோகத்தில் தேவதூதர்கள் இங்கும் அங்குமாகத் துரிதமாக சென்றுகொண்டிருக்கின்றனர். ஒரு தூதன் பூமியிலிருந்து திரும்பி வந்து தனது வேலை முடிந்துவிட்டதாக அறிவிக்கின்றான்; முடிவான சோதனை உலகத்தின் மீது கொண்டுவரப்பட்டிருக்கின்றது. தெய்வீக வார்த்தைகளுக்கு உண்மையாயிருந்ததாகத் தங்களை நிரூபித்த அனைவரும் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொண்டனர். அப்போது கிறிஸ்து, பரலோக ஆசரிப்புக் கூடாரத்தில் தமது மத்தியஸ்த வேலையை நிறுத்துகின்றார்… கிறிஸ்து தமது ஜனங்களுக்காக பாவநிவாரணம் செய்யமுடித்து, அவர்களது பாவங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டார். அவரது ராஜ்யத்தின் குடிமக்களுடைய தொகை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. ராஜ்யமும், அதிகாரமும், வனத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யத்தின் மேன்மையும் இரட்சிப்பைப் பெறப்போகின்றவர்களுக்குக் கொடுக்கப்பட இருக்கின்றது. கிறிஸ்து இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் அவர்கள்மேல் அரசாள்விருக்கின்றார். — GC613, 614 (1911). கச 185.3