கடைசிகாலச் சம்பவங்கள்

201/334

எழுப்புதலோடு சீர்திருத்தமும் இணைந்துகொள்ள வேண்டும்

பரிசுத்த ஆவியானவரது ஊழியத்தின்கீழ் ஒரு எழுப்புதலும், ஒரு சீர்திருத்தமும் உண்டாகவேண்டும். எழுப்புதலும், சீர்திருத்தமும் இரண்டு வெவ்வேறான காரியங்களாகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு புதுப்பித்தலையும், மனம் மற்றும் இருதயத்தினுடைய வல்லமைகளை எழுச்சியூட்டும் ஒரு இயல்பையும், ஆவிக்குரிய மரணத்திலிருந்து ஒரு உயிர்த்தெழுதலையும் எழுப்புதல் குறிக்கின்றது. மீண்டும் ஒழுங்கான ஒரு மறுசீரமைப்பையும், நமது எண்ணங்கள் மற்றும் கொள்கைகளிலும், வழக்கமாக செய்யும் செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்களிலும், வழக்கமாக செய்யும் செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்களிலும் உண்டாகும் ஒரு மாற்றத்தையும் சீர்திருத்தம் குறிக்கின்றது. சீர்திருத்தம் ஆவியின் எழுப்புதலுடன் இணைக்கப்பாவிட்டால், நீதியின் நற்கனியை கொண்டுவரமாட்டாது. எழுப்புதலும் சீர்திருத்தமும், தங்களது நியமிக்கப்பட்ட வேலையைச் செய்யவேண்டும். அப்படிச் செய்வதற்கு, இரண்டுமே ஒன்றோடொன்று கண்டிப்பாக ஒருங்கிணைந் திருக்கவேண்டும். — RH Feb. 25, 1902. கச 137.4