கடைசிகாலச் சம்பவங்கள்

200/334

உண்மையான மனந்திரும்புதலுடன் நமது இருதயங்களை நாம் தாழ்த்தவேண்டும்

நமது மத்தியில் வரவேண்டிய உண்மையான தேவபக்தியின் ஒரு எழுப்புதல், நமது தேவைகள் அனைத்திலும் மிகவும் பெரிதானதும் மிகவும் அவசரமானதுமாக இருக்கின்றது. நமது முழுமுதல் வேலையே, அதைத் தேடுவதாகத்தான் இருக்கவேண்டும். கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள ஊக்கமான முயற்சி இருக்கவேண்டும். தேவன் தமது ஆசீர்வாதத்தை நம்மீது பொழிய விருப்பமில்லாதிருப்பதால் அல்ல, அதைப் பெற்றுக்கொள்ள நாம் ஆயத்தமாக இல்லாததால் அதைப் பெற்றுக்கொள்வதில்லை. உலகப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு மனமுவந்து நல்ல ஈவுகளைக் கொடுக்க எப்படி ஆயத்தமாக இருக்கிறார்களோ, அதற்கும் மேலாக தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு தமது பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்க நம் பரலோகப் பிதா அதிக விருப்பமுள்ளவராக இருக்கிறார். ஆனால், பாவ அறிக்கையினாலும், தாழ்மையினாலும், மன வருந்துதலினாலும், ஊக்கமான ஜெபத்தினாலும், நமக்கு அளிப்பதற்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கின்ற ஆசீர்வாதத்தின்மீதுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டியது நமது வேலையாகும். ஜெபத்திற்குக் கிடைக்கும் பதிலாகமட்டுமே ஒரு எழுப்புதல் எதிர்பார்க்கப்படவேண்டும். — 1SM 121 (1887). கச 137.2

நம் மத்தியிலே முழுமையான ஒரு எழுப்புதல் உண்டாகவேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகின்றேன். மனமாற்றம்பெற்ற ஒரு ஊழியம் செய்யப்படவேண்டும். அங்கு பாவ அறிக்கைகளும், பாவத்திற்கான மனவருத்தமும், மனமாற்றங்களும் கண்டிப்பாக ஏற்படவேண்டும். தேவனுடைய வார்த்தையைப் போதிக்கின்ற அநேகர், குணங்களை மாற்றமடையச் செய்யும் கிறிஸ்துவின் கிருபையைத் தங்கள் இருதயங்களிலே பெற்றிருக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மிகவும் நிரந்தரதாமதமாகப் போய்விடுவதற்கு முன்னதாக, முழுமையான வேலையைச் செய்வதற்கான அவர்களது பாதையில், தடையாய் நிற்பதற்கான எதையும் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. — Letter 51, 1886. கச 137.3