கடைசிகாலச் சம்பவங்கள்

197/334

பின்மாரி உரத்தசத்த ஊழியத்தை உண்டுபண்ணும்

மூன்றாம் தூதனின் உரத்த சத்தத்திற்கு வல்லமை அளிக்கவும், கடைசி ஏழு வாதைகள் ஊற்றப்படும் அந்தக் காலகட்டத்தில் நிற்கத்தக்கதாக பரிசுத்தவான்களை ஆயத்தப்படுத்தவும், “பின்மாரி” அல்லது இளைப்பாறுதல், கர்த்தருடைய சமூகத்திலிருந்து வரும். — EW 86 (1854). கச 135.5

சர்வாயுதங்களைத் தரித்திருந்தவர்கள், மிகுந்த வல்லமையோடு சத்தியத்தைப் பேசக் கேட்டேன்… அது பலனுள்ளதாயிருந்தது… எது இந்தப் பெரிய மாற்றத்தை உண்டாக்கிற்று என்று நான் கேட்டேன். ஒரு தூதன்: “அது பின்மாரி, கர்த்தருடைய சமூகத்திலிருந்து வருகின்ற இளைப்பாறுதல், மூன்றாம் தூதனின் உரத்த சத்தம்” என்று கூறினான். — EW 271 (1858). கச 135.6