கடைசிகாலச் சம்பவங்கள்

196/334

பின்மாரிக்கான வாக்குத்தத்தம்

ஆவியானவர் அப்போஸ்தலர்களின் நாட்களில் பொழியப்பட்டது “முன்மாரி” ஆகும். அதன் விளைவு மகிமையாயிருந்தது. ஆனால் பின்மாரி, அதைக்காட்டிலும் இன்னும் மிகுதியானதாய் இருக்கும். — 8T 21 (1904). கச 135.1

பூமியினுடைய அறுவடையின் முடிவு வேளையில் ஒரு விசேஷித்த ஆவிக்குரிய கிருபையின் அனுக்கிரக பொழிவு, மனுஷகுமாரனின் வருகைக்கு சபையை ஆயத்தப்படுத்தும்படிக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கின்றது. ஆவியானவரின் இந்தப் பொழிவு, பின்மாரிக்காலத்து மழைக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றது. — AA 55 (1911). கச 135.2

தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் இந்தப் பூமியை முடிவாகச் சந்திப்பதற்கு முன்னதாக, அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்து இதுவரை கண்டிராத, ஆரம்ப காலத்தில் கொண்டிருந்த தேவபக்தியின் ஒரு எழுப்புதல், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலே காணப்படும். தேவனுடைய ஆவியும் வல்லமையும் அவரது ஜனங்கள்மீது ஊற்றப்படும். — GC 464 (1911). கச 135.3

இந்த ஊழியம், பெந்தெகொஸ்தே நாளில் நடந்ததற்கு ஒத்ததாக இருக்கும். சுவிசேஷம் முதலாவது சொல்லப்பட்ட நாட்களில், விலை மதிப்புள்ள விதைகள் முளைத்தெழும்பத்தக்கதாக பரிசுத்த ஆவியானவரின் பொழிவு “முன்மாரியாக” கொடுக்கப்பட்டதைப்போல, அறுவடைக்குப் பயிரை முற்றச்செய்யத்தக்கதாக அதன் முடிவில் பின்மாரிப் பொழிவாகக் கொடுக்கப்படும். — GC 611 (1911). கச 135.4