மாரநாதா! (இயேசு வருகிறார்!)

336/366

டிசம்பர்

பரிசுத்த பட்டணத்திற்குமேல் பரந்து விரிந்து காணப்பட்ட காட்சி!, டிசம்பர் 1

“...சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்.” - 2 கொரிந்தியர் 5:10. Mar 669.1

சிங்காசனத்திற்கு மேலாக சிலுவை வெளிப்படையாகத் தெரிந்தது. ஆதாமின் சோதனை மற்றும் விழுகை அதனையடுத்து மாபெரும் மீட்பின் திட்டத்தின் அடுத்தடுத்த செயற்பாடுகள், அனைத்தும் ஒரு பரந்துவிரிந்த காட்சிபோன்று காணப்பட்டது. இரட்சகரின் தாழ்மையான பிறப்பு--அவரின் எளிய-கீழ்ப்படிதல் நிறைந்த ஆரம்ப வாழ்க்கை, யோர்தானில் அவர் ஞானஸ்நானம் பெற்றது, வனாந்தரத்தில் அவர் மேற்கொண்ட உபவாசம், அங்கே அவர் சந்தித்த சாத்தானின் சோதனைகள், பரலோகத்தின் விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களை மக்களுக்கு திறந்தளித்த அவரது பொது ஊழியம், அன்பும் இரக்கமும் மிகுந்த செயல்களால் நிறைந்த அவரது நாட்கள், மலைகளில் தனியாக ஜெபித்துச் செலவிட்ட இரவுகள், அவர் செய்த நன்மைகளுக்குப்பதிலாக பொறாமை, வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சிகளால் அவருக்கு விரோதமாகத் தீட்டப்பட்ட சதிகள், உலகமனைத்தின் பாவங்களின் பாரம் அழுத்தப்பட்டதினால், தாங்கமுடியாமல் கெத்செமெனேயில் அவர் அடைந்த பயங்கரமான-விளங்கிக்கொள்ளமுடியாத கடுந்துயர், கொலைகாரக் கும்பலின் கையில் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டது, பயம் நிறைந்த சம்பவங்கள் நடைபெற்ற அந்த இரவு, எதிர்ப்பைக்காட்டாத ஒரு கைதியாக, அன்பார்ந்த அவர் சீடர்களாலும் கைவிடப்பட்டு, எருசலேமின் வீதிகளில் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டது, தேவகுமாரன் அன்னாவின்முன் எக்களிப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டது, பிரதான ஆசாரியனின் அரண்மனையில் குற்றவாளி யாகவும், கோழைத்தனம் மிகுந்த கொடுங்கோலனாகிய ஏரோதின் விசாரணை மண்டபத்தில் பரிகசிக்கப்பட்டு-நிந்திக்கப்பட்டு-துன்புறுத்தப்பட்டு இறுதியில், மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது-ஆகிய அனைத்துக் காட்சிகளும் தெள்ளத்தெளிவாக படம்போல் காட்டப்பட்டன. Mar 669.2

மேலும், ஆதிக்கம் செலுத்திநிற்கின்ற திரளான ஜனக்கூட்டத்திற்கு முன்பாக, நம் இரட்சகர் பொறுமையோடு பாடனுபவித்தவராக, கல்வாரிப் பாதையில் நடந்தது, பரலோக அதிபதி சிலுவையில் தொங்கியது, பெருமைமிக்க ஆசாரியர்களும், அவரது மரணத்தின் கடைசி மணித்துளியின் கடுந்துயரின் வேலையில் அவரைக் கேலிசெய்து--ஏளனம் செய்து--இகழ்ந்திட்ட இழிந்த கூட்டமும், காணப்பட்டது. இயற்கைக்கும் அப்பாற்பட்ட நிலையில் சூழ்ந்த இருள், பூமியதிர்ச்சி, பிளந்த கன்மலைகள், திறந்த கல்லறைகள்... இவ்வுலக மீட்பர் தமது ஜீவனை விடும்பொழுது, இத்தகைய இறுதிக் காட்சிகள் காணப்பட்டன. Mar 670.1

இத்தகைய பயங்கரமான காட்சிகள் அவை நடைபெற்ற விதமாகவே அப்படியே காணப்பட்டன. சாத்தானுக்கும் அவன் தூதர்களுக்கும் அவனைச் சேர்ந்த அவனது குடிமக்களுக்கும் தங்களது சொந்த கிரியைகளைக் காட்டும் காட்சிகளினின்று முகத்தை திருப்பிக்கொள்ள வல்லமையற்றிருந்தார்கள். இந்த நிகழ்சிகளில் பங்குபெற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை நினைவுகூறுகிறார்கள். அனைவரும் தங்கள் குற்றத்தின் கொடூரத்தன்மையை உணருகிறார்கள். சூரியனின் பிரகாசத்தைவிட மேலாக-தெய்வீக வல்லமையாக-ஜொலிக்கும் நம் ஆண்டவரின் முகப்பிரசன்னத்திலிருந்து தங்களை மறைத்துக்கொள்ள வீணாக முயல்கிறார்கள்; ஆனால், மீட்கப்பட்டவர்களோ, தங்கள் கிரீடங்களை இரட்சகரின் பாதங்களில் வைத்து, “அவர் எனக்காக மரித்தார்!” என்று போற்றினார்கள்.⋆ Mar 670.2

வாக்குத்தத்த வசனம்: Mar 670.3

“பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக...” - கலாத்தியர் 1:3. Mar 670.4