எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
ஓய்வுநாள் கூட்டங்கள்
நீங்கள் ஒய்வு நாள் தோறும் கூடுகையில், உன்காலை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவரைத் துதித்துப் பாடுங்கள். “நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களாற் நம்மைக் கழுவின வரை” இருதயம் போற்றட்டும். கிறிஸ்துவின் அன்பே பேசுகிறவருடைய பேச்சின் பாரமாய் இருக்கட்டும். துதியின் கீதங்களிளெல்லாம் அது எலியா பாஷை நடையில் சொல்லப்படுவதாக. தேவ ஆவியானவர் உங்கள் ஜெபங்களை ஏவட்டும். ஜீவ வார்த்தை பேசப்படுகையில் பரத்திலிருந்து உங்களுக்குச் செய்தி கிடைப்பது போல் உங்கள் இருதயத்தில் உணர்ந்து சாட்சி பகரவேண்டும். LST 157.3
பூரண அன்பின் தன்மைகளை விருத்தி செய்வதற்காக நாம் அவருடைய வீட்டில் கூடவேண்டுமென்று தேவன் போதிக்கிறார். இது பூமியில் வாசஞ் செய்கிறவர்களை, கிறிஸ்து தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்கள் எல்லாருக்கும் ஆயத்தம் பண்ணப் போயிருக்கும் அந்த வாசஸ்தலங்களில் வாசம் பண்ணத் தகுதியுள்ளவர்களாக்கும். அங்கே அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் ஓய்வுநாள் தோறும் மாதந்தோறும் கூடி சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பவரையும் ஆட்டுக் குட்டியானவரையும் பாடிக் கொண்டாடுவார்கள். ---- 6T 349---368 LST 157.4
பரலோகத்தின் தேவன், “கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன பிள்ளைகளுக்கும், தனக்குப் பின் வரும் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்று அறிந்திருக்கின்றேன்” என்று ஆபிரகாமுக்குச் சொன்னது போல ஒவ்வொரு உண்மையுள்ள பெற்றோருக்குஞ் சொல்லுகிறார். ---pp. 114. LST 158.1
* * * * *