எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
ஆயத்த நாள்
வாரம் முழுவதிலும் ஒய்வு நாளுக்கு ஆயத்தம் செய்யப்பட வேண்டுமென்றாலும் வெள்ளிக்கிழமை விசேஷ ஆயத்த நாளிருக்க வேண்டும். (யாத் 16:23; எண் 11:8 வாசிக்க.) இஸ்ரவேல் புத்திரருக்கு வானத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆதாரத்தைத் தயாரிப்பதில் ஏதோ சொற்ப வேலை செய்யப்பட வேண்டியதிருந்தது. இவ்வேலை சுக்கிர வாரமாகிய ஆயத்த நாளில் செய்யப்பட வேண்டுமென்று கர்த்தர் அவர்களுக்குச் சொன்னார். இது அவர்களுக்கு ஓர் சோதனையாயிருந்தது. அவர்கள் ஒய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பார்களோ அல்லவோ என்று தேவன் பார்க்க விரும்பினார். LST 156.3
ஒய்வு நாளின் ஆரம்ப முடிவு நேரங்களை நாம் ஜாக்கிரதையாய்ப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிஷமும் பிரதிஷ்டை யாக்கப்பட்ட பரிசுத்த நேரம் என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும். கூடுமான போதெல்லாம் எஜமான்கள் வேலையாட்களுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலிலிருந்து ஒய்வு துவக்கம் மட்டுமுள்ள நேரங்களைக் கொடுத்துவிட வேண்டும். அமரிக்கையான மனதுடன் கர்த்தருடைய நாளை வரவேற்க வேண்டுமாகையால அவர்கள் ஆயத் தம் செய்வதற்குப் போதுமான நேரம் கொடுங்கள். அப்படிச் செய்வதினால் லெளகீகக் காரியங்களிலுங் கூட உங்களுக்கு ஒரு வித கஷ்டமும் ஏற்படாது. LST 156.4
ஆயத்த நாளில் கவனிக்க வேண்டிய இன்னொரு வேலையுண்டு. இந் நாளில் குடும்பத்தில் அல்லது சபையிலுள்ள சகோதரருக்குள்ள வேற்றுமைகள் எல்லாம் நீக்கப் பட வேண்டும். சகல விதமான கசப்பும், கோபமும் துர்க்குணமும் ஆத்துமாவிலிருந்து அப்புறப் படுத்தப் படவேண்டும். தாழ்மையுள்ள ஆவியுடன், “நீங்கள் சொஸ்தமடையும் படிக்கும் உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்.” யாக 5:16. LST 157.1
ஒய்வு ஆரம்பிக்கு முன் சாரீரம் மாத்திரமல்ல, மனமும் லெளகீக ஜோலியினின்று நீக்கப்பட வேண்டும். பாவி உட்ப்ரவேசிக்க இடங்கொடாத அந்த சுத்தமான ராஜ்யத்திற்காக ஆயத்தப்படுவதில் வாரம் முழுவதும் மக்கள் அடைந்த தென்னவென்பதை அவர்கள் உட்கார்ந்து யோசிக்கும்படிக்கு, தேவன் தமது ஒய்வு நாளை ஆறு வேலை நாட்களில் கடைசியில் வைத்திருக்கிறார். முடிந்திருக்கிற வாரம் ஆவிக்குரிய லாபத்தையா அல்லது நஷ்டத்தையா எதைக் கொண்டு வந்திருக்கிரதென்பதைப் பார்க்க நான் ஒய்வு தோறும் நமது ஆத்துமாக்களோடு கணக்குப் பார்க்க வேண்டும். LST 157.2