எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
ஒழுங்கும் சுத்தமும்
ஒழுங்கு பரலோகத்தின் பிரதம சட்டம். பரலோகப் பிரகாரங்களில் வியாபித்திருக்கும் ஒழுங்கும் ஒற்றுமையும் தமது ஜனங்களுடைய வீடுகளில் காணப்பட வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். சாத்தியமானது தன் திருப்பாதங்களை அசுத்தமான அல்லது அழுக்கான பாதையில் ஒருபோதும் வைக்கிறதில்லை. சத்தியம் ஸ்திரீ புருஷரை தடியராகவும் அல்லது முரடராகவும் ஒழுங்கீனராகவும் செய்கிறதில்லை. அதை ஏற்றுக்கொள்ளுகிறவர்களை எல்லாம் அது மேலான நிலைமைக்கு உயர்த்துகிறது. கிறிஸ்துவின் சக்தியின் கீழ் இடைவிடாத ஓர் சுத்திகரிப்பின் வேலை நடைபெறுகிறது. LST 150.2
பாளயத்தின் வழியாய்க் கடந்துசெல்லும் கர்த்தரின் தூதன் அவர்களுடைய கூடாரங்களிலும் அவைகளைச் சுற்றிலும் எல்லாம் சுத்தமாயும் ஒழுங்காயும் இருக்கவேண்டுமென்று இஸ்ரேல் சேனைகளுக்கு விசேஷ கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. கர்த்தர் இக்காரியங்களில் கவலையுள்ளவராயிருந்தாரா? இருந்தார். ஏனெனில் அவர் அவர்களுடைய அசுத்தத்தைக் கண்ட போது அவர்களுடைய சேனைகளோடு போருக்கு முன் செல்லக் கூடாதிருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் சுத்தப் பழக்க வழக்கங்களைக் கையாடவேண்டுமென்று அவ்வளவு கவனமாயிருந்தவர் இக்காலத்தில் அவருடைய ஜனங்களின் வீடுகளில் எவ்வித அசுத்தமும் இருக்க இடங்கொடார். எவ்வகை அசுத்தையும் தேவன் விரும்புகிறதில்லை. சகலமும் ஒழுங்காயும், நேர்த்தியாயும், சுத்தமாயும் இல்லாதிருந்தால் நாம் எவ்விதம் அவரை நமது வீடுகளில் வரவழைக்கக் கூடும்? LST 150.3