எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

128/230

பிள்ளைகளைப் பாதுகார்

பிதாக்களே, தாய்மாரே, உங்களைப் பொறுத்திருக்கும் உத்தரவாதத்தின் முக்கியத்தை நீங்கள் உணருகிறீர்களா? கவலையீனமும் ஒழுக்கக் கேடுமான வழக்க பழக்கங்களினின்று உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை நீங்கள் உணருகிறீர்களா? LST 149.4

அவர்களுடைய குணங்களைச் சரியானபடி பெலப்படுத்தக் கூடிய சகவாசங்களை மாத்திரம் செய்யும் படிக்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு இடங்கொடுங்கள். அவர்கள் எங்கே இருப்பார்கள் என்றும் என்ன செய்வார்கள் என்றும் நீங்கள் அறிந்திருந்தால் மட்டும் நீங்கள் அவர்களை சாயங்காலத்தில் வெளியே போக விடுங்கள். LST 149.5

சன்மார்க்க சுத்தத்தைப் பற்றிய சத்தியங்களை அவர்களுக்குப் போதியுங்கள். நீங்கள் அவர்களுக்குக் கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாகப் போதிப்பதை அசட்டை செய்திருந்தால் உங்கள் கடமையை உடனே ஆரம்பியுங்கள். காலா காலத்திற்கான உங்கள் உத்திரவாதங்களையும் வேலையையும் எடுத்துக்கொள்ளுங்கள்.---7 T 66. LST 150.1