எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

124/230

பிளைகளின் இளம்பிராய்ப் பயிற்சி

பிள்ளைகளின் இளம்பிராயப் பயிற்சி மிகவும் முக்கியமானது.குணம் கட்டப்படுவதற்கும் வாழ்க்கைகிராமப்படுதற்கும் பின்னான வருஷங்களில் கிடைக்கும் சகல போதனையும் பயிற்சியும் செய்கிறதைப் பார்க்கிலும் இளமையிலும் பாலியத்திலும் கற்ற பாடங்களும் ஏற்பட்ட பழக்கங்களும் அதிகம் செய்கின்றன வாயிருக்கின்றன. LST 146.2

பெற்றோர் இதை அவசியம் கவனிக்கவேண்டும். பிள்ளைகளை வளர்ப்பதையும் பயிற்சிப்பதையும் பற்றியுள்ள நெறிகளை அவர்கள் அறிந்திருக்கவேண்டும். அவர்களை சரீர மனோவாத்தும சுகமுள்ளவர்களாய் வளர்ப்பதற்கு அவர்கள் திராணியுள்ளவர்களாயிருக்க வேண்டும். LST 146.3

உங்கள் பிள்ளைகள் சுயவெறுப்பையும் தன்னடக்கத்தையும் கையாடுவதற்கு அவர்கள் தொட்டிலிலிருக்கும் போதே அவர்களுக்குப் போதியுங்கள். இயற்கையமைப்பின் வனப்பில் களி கூறுவதற்க்கும், பிரயோஜனமான அலுவல்களில் சரீரமனோ சக்திகளை எல்லாம் சமமாய் பிரயோகிப்பதற்கும் அவர்களுக்குப் போதியுங்கள். அவர்கள் சுகமான தேசக் கட்டுடையவர்களாயும் நல்நடக்கையுளளவர்களாயும் சிறந்த இலட்சணக்களும் இனிய குணக்களுமுடையவர்களாயுமிருக்கும் படி பாருங்கள்.தேவன் நாம் நமது தற்கால வாழ்விற்காக மாத்திரமல்ல, நமது நித்திய வாழ்விற்காக ஜீவிக்க வேண்டுமென்று நோக்க முடையவர்களாயிர்க்கிறார் என்னும் சத்தி யத்தை அவர்களுடைய உருக்கமுள்ள மனதில் படும்படிச் செய்யுங்கள். சோதனைக்கிணங்குகிறது பெவீனமும் அக்கிரமுமாயிருக்கிறது; அதற்கு எதிர்த்து நிற்பதோ சிறந்ததும் மனுஷததன்மையுமானது என்று அவர்களுக்குப் போதியுங்கள். இப்பாடங்கள் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை போலிருந்து நீங்கள் பூரிப் படையத்தக்கதான கனியைக்கொடுக்கும்.M.H.372-386. LST 146.4

நீங்கள் தேவ பிரசன்னமுடையவர்களாயும், ஊக்கமும் அன்புமுள்ள இருதயமுடையவர்களாயும் ஆகாயத்தினாலும் சூரிய வெளிச்சத்தினாலும் பிரகாசமாக்கப்பட்டதும் தன்னயமற்ற உபசரணை, வாழ்த்துதல்களினால் சந்தோஷமடையப் பெற்றதுமான ஓர் எளிய வீடு உடையவர்களாயுமிருந்தால் அது உங்கள் குடும்பத்துக்கும் களைப்பபுற்ற பிரயாணிக்கும் சுவர்க்கம் போலிருக்கும்.-2T 527. LST 147.1