எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

118/230

தேவனோடு சஞ்சரிப்பது

தேவனோடு சஞ்சரிப்பதால் ஆட்துமாவுக்கு அவருடைய சித்தத்தைப் பற்றிய உள்ளான அறிவு அருளப்படுகிறது. ஆனால் விசுவாசிக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறவர்களில் அநேகருக்கு மெய்யான குணப்படுதல் என்றால் என்னவென்று தெரியாது. இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பிதாவோடு அந்நியோன்னியமாய் இருக்கும் அனுபோகம் இல்லாமல், அவர்கள் இருதயத்தைப் பரிசுத்தமாக்கும் தேவ கிருபையின் வல்லமையை ஒருபோதும் உணராதிருக்கிறார்கள். ஜெபிப்பதும் பாவம் செய்வதும், பாவம் செய்வதும் ஜெபிப்பதுமான அவர்கள் ஜீவியங்கள் வர்மத்தினாலும், வஞ்சகத்தினாலும், பகையினாலும், பொறாமையினாலும் சுய அன்பினாலும் நிறைந்திருக்கிறது, இவ்வகுப்பினரின் ஜெபங்கள் தேவனுக்கு அருவருப்பானவைகள். LST 139.4

உண்மையான ஜெபம் ஆத்தும சக்திகளை உடன்படுத்தி ஜீவியத்தைத் தாக்குகிறது. இவ்விதம் தன் தேவைகளைத் தேவனுக்கு முன்பாக ஊற்றுகிறவன் வானத்தின் கீழுள்ள மற்றவைகளை எல்லாம் சூனியமாக உணருகிறான், “ஆண்டவரே, என் எண்ணங்களெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” என்றும் ” என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது” என்றும் தாவீது சொன்னான். --- 4T 529-35 LST 140.1