எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

117/230

செம்மையானவர்களின் ஜெபம்

சிநேகிதனிடம் இருதயத்தை திறப்பது போல தேவனிடம் திறப்பது தான் ஜெபம். விசுவாசக்கண் தேவனை மிகவும் சமீபமாகக் காணும். தேவனுடைய அன்பைப் பற்றியும் அவர் தனக்காகப் படும் கவலையைப் பற்றியும் அருமையான அத்தாட்சி ஜெபிப்போருக்குக் கிடைக்கலாம். ஆனால் அநேக ஜெபங்களுக்கு ஒருபோதும் பதில் கிடைககாதிருப்பின் காரணமென்ன? “கர்த்தரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்’ என்று தாவீது சொல்லுகிறான். இன்னொரு தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தர் ‘உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடிணீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டு பிடிப்பீர்கள்’ என்னும் வாக்குத்தத்தத்தை நமக்குக் கொடுக்கிறார். பின்னும் அவர் சிலரை குறித்து, ‘தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை’ என்று பேசுகிறார். அப்படிப்பட்ட விண்ணப்பங்கள் ஒப்புக்கான பிரார்த்தனைகள், உதட்டாரதனையாய் மாத்திரமிருக்கிறது, அதை ஆண்டவர் எற்றுக்கொள்ளுகிறதில்லை. LST 139.2

நாத்தான்வேல் அத்திமரத்தின் கீழிருக்கையில் அவன் செய்த ஜெபம் உத்தம இருதயத்திலிருந்து வந்தது, அதை ஆண்டவர் கேட்டுப் பதிலளித்தார். கிறிஸ்து அவனைக் குறித்து, “இதோ, கபடமற்ற உத்தம இஸ்ரவேலன்’ என்றார். ‘கர்த்தர் எல்லாருடைய இருதயங்களையும் பார்க்கிறார், அவர்களுடைய உள்ளான நோக்கங்களையும் எண்ணங்களையும் அறிகிறவராயிருக்கிறார்.’ ‘செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.’ தங்களை உயர்த்தாமல் தங்களின் பெரும் பலவீனத்தையும் அபாத்திரத்தையும் உண்மையாய் உணர்ந்து தங்கள் இருதையத்தை அவரிடம் திறப்போருக்கு அவர் தீவிரமாய் செவி கொடுப்பார். LST 139.3