எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
இரட்டை நஷ்டம்
பூலோகக் கிரீடத்தை பற்றிக் கொள்வாதற்கு நெருக்கிச் சென்ற அந்த உருக்குலைந்த நோய்ப்பட்ட கூட்டத்தார் இவ்வுலகத்தில் தங்கள் ஆசா பாசங்களையும் பொக்கிஷங்களையும் வைத்திருப்பவர்களே. அவர்கள் எப்பக்கத்திலும் ஆசாபங்கமடைந்த போதிலும், அவர்கள் மேலோகத்ஹின் மேல் ஆசை வைத்து, அங்கே தங்களுக்கு ஒரு பொக்கிஷமும் வீடும் பெற மாட்டார்கள். பூலோக கிரீடத்தை அடையும் படி நாடி அதை அவர்கள் பெற்றுக் கொள்ளாமல் பரம கிரீடத்தையும் இழந்து விடுகிறார்கள். பூலோக ஐசுவரியமடைவதற்கு முழுவதும் பிரயாசப்பட்டவர்கள் ஆசாபங்கமும் அதோகதியும் அர்த்தனாசமும் அடைந்திருக்க மற்றவர்களும் அதே வழியை பின்பற்றுகிறார்கள். தங்களுக்கு முன்மாதிரியாய் இருந்தவர்கள்இன் நிர்பாக்ய ,முடிவை அவர்கள் சாட்டை செய்யாமல் வெறி கொண்டு பாய்கிறார்கள். LST 80.4
கிரீடத்தை அடைந்து அதிலே ஓர் பங்கை பெற்றதின் நிமித்தம் புகழப் பட்டவர்கள் தங்கள் வாஆழ்வின் முதல் நோக்கமாகிய அய்சுவர்யம் அடைகிறார்கள். ஐசுவர்யவாங்களுக்கு உலகம் அளிக்கிற கனத்தை ஆவர்கள் பெறுகிறார்கள். அவார்களுக்கு உலகத்தில் செல்வாக்கு உண்டு, சாத்தானும் அவனுடைய பொல்லாத தூதர்களும் திருப்தி அடைகிறார்கள். அபப்டி பட்டவர்கள் மெய்யாகவே தங்களுடயவர்கள் என்று அவர்களுக்கு தெரியும். அவர்கள் தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்து கொண்டு இருக்கிறதினால் அவர்கள் சாத்தானுடைய வல்லமை ஊள்ள தூது ஆட்கள் ஆகிறார்கள். LST 81.1