சபைகளுக்கு ஆலோசனை

65/326

சபையில் பிரிவினையைச் சமாளித்தல்

அந்தியோகியாவிலிருந்து வந்த பிரதிநிதிகள் ஒரு பொதுக்கூட்டத்துக்காக பல சபைகளிலிருந்து எருசலேமில் கூடியிருந்த சகோதரரைச் சந்தித்தனர். அங்கு கூடியிருந்தவர்களுக்குப் புற ஜாதிகளின் மத்தியில் தாங்கள் அடைந்த சித்தியை எடுத்துக் கூறினர். அப்போது அவர்கள் சில பரிசேயர்கள் அந்தியோகியாவுக்குச் சென்று, விசுவாசிகளான புறஜாதியார் மோசேயின் பிரமாணத்தின்படி விருத்த சேதனம் செய்யப்படாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று செர்னனதினால் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றி தெளிவாக விரித்துரைத்தனர். பொதுக் கூட்டத்தில் இக் கேள்வி மிகவும் கடுமையாகத் தர்க்கிக்கப்பட்டது. CCh 205.2

புறஜாதிகளாகிய விசுவாசிகள் மீது சடங்காச்சாரப் பிரமாணத்தைச் சுமத்துவது நல்ல தல்ல என்று பரிசுத்த ஆவியானவர் கண்டார். இவ்விஷயத்தில் அப்போஸ்தலருடைய கருத்து எவ்வாறு இருந்ததோ, அவ்வாறே ஆவியானவருடைய மனசும் இருந்தது. யாக்கோபு சங்கத்துக்குத் தலைமை வகித்தார். ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்று நான் தீர்மானிக்கிறேன்” என்று அவர் முடிவுரை கூறினார். இது வாக்குவாதத்துக்கு முற்றுப்புள்ளிவைத்தது. CCh 206.1

இச்சந்தர்ப்பத்தில், யாக்கோபு அப்போஸ்தலன் சங்கத்தின் தீர்மானத்தை அறிவிக்கத் தெரிந்தெடுக்கப்பட்டாரெனப் புலப்படுகிறது. ஆயினும், புறஜாதியாரான விசுவாசிகள் கிறிஸ்தவ சட்டங்களுக்கு விரோதமாயிருந்த பழக்கங்களை விடவேண்டியதாயிருந்தது. விக்கிரகத்துக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்துக்கும், நொறுங்குண்டு செத்ததற்கும், இரத்தத்திற்கும் விலகி இருக்க வேண்டுமென்று, எழுத்தினால் கற்பிக்க வேண்டுமென அப்போஸ்தலரும் மூப்பரும் சம்மதித்தனர். கற்பனைகளைக் கைக்கொண்டு, பரிசுத்த ஜீவியம் செய்ய அவர்கள் வற்புறுத்தப்பட வேண்டியதிருந்தது. விருத்தசேதனம் இன்னும் கட்டுப்படுத்துகிறதென்று சொன்னவர்கள் அப்போஸ்தலரால் அங்கீகாரம் பெறவில்லை என அவர்களுக்கு உறுதி அளித்தல் அவசியமாயிற்று. CCh 206.2

அந்த ஆலோசனை சங்கத்தில், யூத, புறஜாதிய, கிறிஸ்தவ சபைகளை எழுப்ப முக்கியமாயிருந்த அப்போஸ்தலரும், உபதேசகர்களும், பற்பல சபைகளிளலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருந்தனர். எருசலேமிலிருந்து மூப்பர்களும், அந்தியோகியாவிலிருந்தும், செல்வாக்குள்ள சபைகளிலிருந்ததும் பிரதிநிதிகளும் வந்திருந்தனர். தேவ சித்தத்தின்படி ஸ்தாபிக்கப்பட்ட சபைச் சிறப்புடனும், தெளிவாக்கப்பட்ட நியாயத்துடனும் சங்கம் நடை பெற்றது. அவர்களுடைய தீர்க்காலோசனைகளின் பயனாக, புறஜாதிகளின் மேல் பரிசுத்த ஆவி அருளப்பட்டபடியால், தேவன் தாமே அக்கேள்விக்கு விடையளித்தாரென அவர்கள் எல்லாரும் அறிந்துகொண்டனர். ஆவியானவருடைய நடத்துதலுக்குப் பின்செல்வது தங்களது கடமை என்று அவர்கள் உணர்ந்துகொண்டனர். CCh 206.3

கிறிஸ்தவர்கள் ஏகோபித்து, அந்தக் கேள்விக்கு வாக்குரிமை கொடுக்க அழைக்கப்படவில்லை. செல்வாக்கும் நீதியுமுள்ள மனுஷராகிய அப்போஸ்தலரும் மூப்பரும் சட்டத்தைப் பிறப்பித்து வெளியிட்டனர். ஆகவே அது பொதுவாக எல்லாக் கிறிஸ்தவ சபைகளாலும் அங்கிகரிகப்பட்டது. என்கிலும் அத்தீர்மானம் எல்லாருக்கும் விருப்பமளிக்கவில்லை. அங்கிருந்த பேராசையும் சுய நம்பிக்கையுமுள்ள ஒஉ பிரிவான சகோதரர்கள் அதை அங்கீகரிக்கவில்லை. டூந்த மனுஷர் தங்கள் சுய பொறுப்பில் அவ்வேலையைச் செய்ய ஈடுபட்டிருப்பதாக உரிமை பாராட்டினர். சுவிசேஷத் தூதைப் பிரசங்கிக்க தேவன் அபிஷேகம் பண்ணின மனிதருடைய வேலையைக் கீழே தள்ளிப் போட அவர்களள் வகை தேடி, புதிய திட்டங்களை சிபாரிசு செய்து, குற்றங் கண்டு பிடித்துக் குறை கூறுதலைப் பேணினர். ஆதிமுதல் சபை கடந்துசெல்ல வேண்டிய இடையூறுகள் பல இருந்தன. காலம்முடியும் வரைக்கும் அப்படியே இருக்கும். A.A.196,197. CCh 207.1