சபைகளுக்கு ஆலோசனை
சபைகள் தீர்க்கதரிசிகளினால் ஸ்தாபிக்கப்பட்டன
உண்மையுள்ள ஊழியர் சுவிசேஷத்துக்கு ஆத்துமாக்களை எங்கே எல்லாம் ஆதாயம் பண்ணுகிறார்களோ, அங்கே எல்லாம் சபைகள் ஸ்தாபனமாவதற்கு எருசலேமிலுள்ள சபை நியமனம் ஒரு மாதிரியாக இருந்தது. சபையை மேற்பார்க்கும்படி பொறுப்பளிக்கப்பட்டவர்கள், தேவனுடைய சுதந்தரத்தின் மேல் அதிகாரம் செலுத்தக் கூடாது. அவர்கள் ஞானமுள்ள மேய்ப்பர்களாக, “தேவனுடைய மந்தையை மேய்த்து,.....மந்தைக்கு மாதிரியாயிருக்க வேண்டும். அப்படியே, உதவிக்காரரும், பரிசுத்த ஆவியும் நிறைந்து, நற்சாட்சி பெற்றவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் நீதியின் பக்கத்தில் ஐக்கியமாக நின்று, தீர்மானத்தோடும் உறுதியோடும் அதை நிலைநாட்ட வேண்டும். இவ்விதமாக அவர்கள் முழு மந்தையின் மீதும் ஐக்கியமுள்ள செல் வாக்கை உடையவர்களாயிருக்பார்கள்.A.A.91. CCh 204.2
புதிய விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சியின் ஓர் முக்கிய அம்சமாக, சுவிசேஷ திட்டங்கள் அவர்களைச் சூழ்ந்து பாதுகாப்பு அளிக்க அப்போஸ்தலர் கவனம் செலுத்தினர். விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான காரியங்களுக்காக, நல்ல ஒழுங்கு முறைகள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு சபை யிலும் உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டனர். CCh 204.3
இது எல்லா விசுவாசிகளையும் ஒரே சரீரமாக ஒன்றுபடுத்தும் சுவிசேஷ ஒழுங்குக்கு இசைவாக இருந்தது. இத்திட்டத்தை அப்போஸ்தலனாகிய பவுல் தன் ஊழிய கால முழுவதும் கவனமாகப் பின்பற்றினார். அவர் ஊழியம் செய்தஎந்த இடத்திலும் கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள், தக்க சமயத்தில், ஒரு சபையாக ஸ்தாபிக்கப்பட்டனர். விசுவாசிகள் சொற்பப் பேராயிருந்த சமயத்திலும், இப்படிச் செய்யப்பட்டது. இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன், என்ற வாக்கை நினைவு கூர்ந்தவர்களாக, கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாயிருக்கும்படி கற்பிக்கப்பட்டனர்.A.A.185,186. CCh 205.1