சபைகளுக்கு ஆலோசனை

42/326

“ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின் மேல் வைக்காதேயுங்கள்”

தேவ கற்பனை நீடித்திருக்கும் அளவுக்குத்தக்க இலட்சியமுள்ள திட்டத்தின் மீது தசமபாக ஒழுங்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. தசமபாகத்திட்டம் யூதருக்கு ஆசீர்வாதமாக விருந்தது; இல்லாவிட்டால் தேவன் அதை அவர்களுக்குக் கொடுத்திருக்கமாட்டார். அப்படியே கால முடிவுமட்டும் அதைக் கைக்கொள்ளுபவர்களுக்கும் அது ஆசீர்வாதமாகவிருக்கும். CCh 154.2

எந்தச் சபைகள் ஒழுங்குடன் தாராளமாக தேவ ஊழியத்தை ஆதரிக்கின்றனவோ, அவைகள் ஆவிக்குரிய சுபீட்சம் பெருகி வாழ்கின்றன. கிறிஸ்துவின் பின்னடியாரில் காணப்படும் தாராளா சிந்தை ஆண்டவருடைய சித்தத்தோடு இணைக்கப் பட்டிருக்கிறதெனக் காட்டும் ஓர் அத்தாட்சியாகும். ஐசுவரியமுடையவர்கள் தாங்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டுமென்று எண்ணுவார்களாகில், அவர்கள் தேவைகள் மிக்க குறைவுபடும். மனச்சாட்சி கூர்மையுடன் வேலை செய்தால், அது, கர்த்தருடைய ஊழியத்தில் செலவிடப்படவேண்டிய தேவனுடைய பணம் அனாவசியமாக வீண் காட்சிகளுக்கும், மாய்கைகளுக்கும், அகந்தைக்கும், மித மிஞ்சிய ஆகாரங்களுக்கும் ஊதாரித்தனமாக செலவிடுவதைக் குறித்து சாட்சி பகரும். தேவனுடைய பொருட்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருப்பவர்கள் தங்கள் போக்கைக் குறித்து ஆண்டவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். CCh 155.1

கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களை தங்களையும், தங்கள் வீடுகளையும் அலங்கரிப்பதிலும், தங்கள் மேஜைகளில் வைக்கப்படும் சுகத்தைக் கெடுக்கும் ஆகாரங்களிலும், குறைவாக செலவு செய்வார்களாகில், தேவனுடைய பொக்கிஷத்திற்கு அதிகமாக அவர்கள் கொடுக்க முடியும். தாங்கள் நித்திய ஐசுவரியத்தை அடையும்படி, பரத்தையும், தம் ஐசுவரியத்தையும், மகிமையையும் துறந்து ஏழையாக வந்த தங்கள் மீட்பரைப் பின் பற்றுகிறவர்க்ளாயிருப்பார்கள். CCh 155.2

ஆனால் அநேகர் ஐசுவரியத்தைப் பெருக்க ஆரம்பிக்கும் போதே எவ்வளவு காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேர்க்கக்கூடுமென கணக்குப் போடுகிறார்கள். தங்களுக்கென ஐசுவரியத்தைப் பெருக்கும் நோக்கத்தினால், அவர்கள் தேவனுக்கென ஐசுவரியவான்களாவதில் தவறுகிறார்கள். செல்வம் பெருகுவதற்குத் தக்கபடி தாராளா சிந்தையிலும் அவர் கள் பெருகுவதில்லை. ஐசுவரியத்தின் மீது அவர்கள் ஆசை பெருகும்போது, அவர்கள் பற்றுகள் அதனோடே கட்டப்படுகின்றன. அவர்களுடைய சொத்தின் மீது அசைப்பலப்படுவதினால், சிலர் தசமபாகம் செலுத்துவதை ஓர் அநீதியும் பளுவுமான வரியென எண்ணுகிறார்கள். CCh 155.3

தேவி ஆவி, ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின் மேல் வைக்கதேயுங்கள் என்கிறார். சங். 62:10. நான் அவனைப் போல ஐசுவரியவானாயிருந்தால், நான் தேவனுக்கு அதிகமாய்க் கொடுப்பேன். தேவ ஊழியத்திற்கேயன்றி வேறொன்றுக்கும் அதை உபயோகிக்க மாட்டேன் என்று அனேகர் சொல்லிக்கொள்ளுகிறார்கள். இப்படிச் சொன்னவர்களில் சிலருக்கு ஐசுவரியத்தைக் கொடுத்து தேவன் பரீட்சித்திருக்கிறார்; பணத்தோடு பெருஞ்சோதனையும் வந்தபடியால், இவர்கள் ஏழைகளாயிருந்த காலத்தில் கொடுத்ததைக் காட்டிலும் மிகக் குறைவாகவே கொடுக்கிறார்கள். அவர்கள் மனமும் இருதயமும் ஐசுவரிய மயக்கத்தினால் நிறைவதால், விக்கிரக வணக்கம் செய்கிறார்கள். 3T. 401-405. CCh 156.1