சபைகளுக்கு ஆலோசனை
சொத்துக்களைச் சரியான முறையில் ஒழுங்கு படுத்தல்
தெளிந்த புத்தி நிதானத்தோடிருக்கும் போதே பெற்றோர்கள் ஜெபத்தோடு தேவ சித்தத்தையும், சத்தியத்தையும் பற் றிய அறிவுள்ளவர்களோடு கலந்து ஆலோசித்துத் தங்கள் சொத்துக்கள் பற்றி தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். CCh 152.3
கஷ்டப்பட்டு, வறுமையிலிருக்கும் பிள்ளைகளையுடைவர் தங்கள் பொருளை நியாயமான முறையில் செலவிடுவார்களெனக் கண்டால் அவர்களைக் கவனிக்க வேண்டும். ஆனால் இவ்வுலக ஆஸ்திகளையுடைய அவிசுவாசிகளான பிள்ளைகளாயிருந்து, அவர்கள் உலகத்துக்கு ஊழியஞ்செய்கிறவர்களானால், பிள்ளைகள் என்ற காரணத்தையிட்டி அவர்களுக்குச் சொத்துகளைக் கொடுப்பதானது தங்களை உக்கிராணக்காராகிய ஆண்டவருக்கு விரோதமாகப் பாவஞ் செய்வதாகும். தேவனுடைய உரிமைகளை இளப்பமாக மதிக்கக் கூடாது. CCh 153.1
பெற்றோர்கள் தங்கள் மரண சாசனத்தை எழுதிவிட்டாலும், அவர்கள் உயிரோடிருக்கும் போது தேவனுக்குக் கொடுக்கும் பொறுப்பிலிருந்து அது அவர்களை விலக்காது என்பது தெளிவு. அவர்கள் கொடுக்க வேண்டும். தங்கள் ஜீவகாலத்தில், மிகுதியாகவிருக்கும் தங்கள் சம்பத்திலிருந்து கொடுப்பதினால் வரும் இம்மையின் திருப்தியையும், மறுமையின் பலனையும் அவர்கள் அடைய வேண்டும். தேவனுடைய ஊழியம் வளர அவர்கள் தங்கள் பாகத்தைச் செய்ய வேண்டும். தமது தோட்டத்தில் வேலை நடைபெறும்படி ஆண்டவர் அவர்களுக்குக்கருளிய பொருளை அவர்கள் உபயோகிக்க வேண்டும். 3 T. 121. CCh 153.2
தேவனுடைய பொக்கிஷசாலையில் செலுத்தப்படுவதைக் கொடாமல் தங்கள் பிள்ளாஇகளுக்கென பொருளைக் குவிப்பதினால், அவர்கள் தங்கள் பிள்ளைகளுடைய ஆவிக்குரிய நன்மைக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள். தங்களுக்கே இடறலாயிருக்கும் சொத்துக்களைத் தங்கள் பிள்ளைகளின் பாதைகளில் போட்டு, அவர்கள் விழுதலுக்கு ஏதுவுண்டாக்குகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையில் பலர் பெருந் தவறு செய்கிறார்கள். தேவன் தங்களுக்கு அருளிய பொருளைத் தகுந்த வழியில் உபயோகிப்பதினால் தங்களுக்கும் பிறருக்கும் வரும் நன்மையைத் தடுத்து, சிக்கனஞ்செய்து, தன்னலமும் பொருளாசையுமுடையவர்களாகிறார்கள். தாங்கள் பயன்படுத்தக் கூடாத ஐசுவரியத்தை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று முனைவதால் அவர்கள் தங்கள் ஆத்தும நாட்டத்தை அசட்டை செய்து, ஆத்தும வளர்ச்சியில் குன்றிப்போகிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொத்துகளை விட்டுப் போகிறார்கள். அது தங்களுக்குச் சாபமாயிருந்ததைப் பார்க்கிலும் அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பத்தில் ஒன்பது வீதம் அதிக சாபமாகி விடுகிறது. பெற்றோரின் சொத்துக்களை நம்பிய பிள்ளைகள் இம்மை வாழ்க்கையிலும் சித்தியடையத் தவறி, பொதுவாக மறுமை வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள். CCh 153.3
பயன் தரும் உழைப்புக்குரிய அறிவும், சுயநலமற்ற கொடையுள்ள ஜீவியத்திற்கான முன் மாதிரியுமே பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுப் போகக்கூடிய சிறந்த மரணசாசனப் பொருளாகும். தேவ ஊழியம் முன்னேறவும், பிறர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தங்கள் அவசியத்தை நிவிர்த்திக்கவும் உபயோகப்பதினால் அவர்கள் பணத்தின் மெய்யான மதிப்பைக் காட்டுகிறார்கள். 3 T. 399. CCh 154.1