சபைகளுக்கு ஆலோசனை
அவர் தரும் வருமானத்தில் பத்திலொன்றை தேவன் கேட்கிறார்
தசமபாக ஒழுங்கு மோசேயின் காலத்திற்கு முற்பட்டது. ஆதாம் காலத்திலிருந்தே மோசேக்கு முற்பட்டிருந்தவர்கள் பக்தி மார்க்க காரியங்களுக்கு நன் கொடை அளிக்க தேவன் ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் பெற்றுகொண்ட இரக்கங்கள், ஆசீர்வாதங்களைப் பாராட்டுவதின் அத்தாட்சியாக அவர்கள் காணிக்கைகள் கொடுத்து, தேவ திட்டங்களை நிறைவேற்றவேண்டியிருந்தது. இது பின் வந்த சந்ததிகளாலும் கைக் கொள்ளப்பட்டது; ஆபிரமாக் உன்னத தேவனுடைய ஆசாரியனான மெல்கிசேதேக்குக்குத் தசமபாகம் செலுத்தினான். யோபின் காலத்தில் இதே ஏற்பாடு இருந்தது. யாக்கோபு பெத்தேலில் தன்னந்தனியாக் காசு பணமின்றி பரதேசியாக கற்றலையணை மீது படுத்து நித்திரை செய்தபோது: தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று பிரதிக்கினை செய்தான். ஆதி. 28:22. கொடுக்கும்படி தேவன் மனிதனைக் கட்டாயப்படுத்துகிறவரல்ல. அவர்கள் மனப்பூர்வமாய்க் கொடுக்க வேண்டும். மனமில்லாமல் கொடுக்கும் காணிக்கைகளால் அவர் தமது பொக்கிஷசாலையை நிரப்புவதில்லை. CCh 148.1
பணவருவாய்க்கு வருமானத்தில் பத்திலொன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். தசமபாகம் கொடுப்பதில் தாராள சிந்தையோடு கொடுப்பது மனித மனச்சாட்சியைப் பொறுதத்து. இது மனச்சாட்சிக்கு விடப்பட்ட விஷயமாயினும், யாவருக்கும் பொருந்தும் திட்டமான ஓர் ஏற்பாடு; கண்டிப்பு அவசியமில்லை. CCh 148.2
தங்கள் வருமானத்தில் பத்திலொன்றைக் கொடுக்கும் படி மோசேயின் காலத்தவர்களைத் தேவன் கேட்டார். இவ்வாழ்க்கையில் விருத்தி பண்ணி, திருப்பிக் கொடுக்கப்பட்ட வேண்டிய தாலந்துகளை அவர் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர் பத்திலொன்றை உரிமை பாராட்டிக் கேட்கிறார்; இது மனிதன் தேவனுக்குத் திருப்பிக் கொடுக்கக் கூடிய மிகச் சிறிய பாகம். நான் உனக்கு பத்தில் ஒன்பதைத் தருகிறேன்; பத்திலொன்றை கேட்கிறேன்; அது என்னுடையது என்று அவர் சொல்லுகிறார். தசமபாகம் கொடாதிருக்கும் போது, மனிதர் தேவனைக் கொள்ளையிடுகிறார்கள். தசம பாகம் தவிர, பாவ நிவாரண பலி, சமாதான பலி, ஸ்தோத்திரப் பலி முதலியவைகளும் செலுத்தப்படவேண்டியிருந்தது. CCh 149.1
இப்படித் தேவன் உரிமை பாராட்டிக் கேட்கும் தசமபாகத்தைப் செலுத்தாமலிருப்பது கொள்ளையடிப்பென அவர்களைப் பற்றி பரலோகப் புத்தகங்களில் பதிவு செய்யப்படுகிற்து. அப்படிச் செய்கிறவர்கள் சிருஷ்டிகரை வஞ்சிக்கிறார்கள்; அவர்களின் அசட்டைத்தனமான பாவம் அவர்களுக்குக் காட்டப்படும்போது, அவர்கள் அது முதல் சரியான முறைகளைக் கையாடுவது மட்டும் போதாது. இது பரலோகத்தில் பதியப்பட்ட அவர்களுடைய கடந்த கால தவறுகளை நிவாரணஞ் செய்யாது. தேவனிடம் உண்மையற்று நடந்ததற்காகவும் தங்கள் இழிவான நன்றிகெட்ட வாழ்க்கைக்காகவும் மனந்திரும்புதல் அவசியம். CCh 149.2
உலகச் சரித்திரத்தில் தேவனுடைய ஜனங்கள், உற்சாகமாகவும் தாராளமாகவும் கொடுத்து, அவருடைய திட்டத்தை நிறைவேற்றியபோது, அவர்களைத் தேவன் ஆசீர் வதித்து, அவர்கள் பண்டகசாலைகளை நிரப்பினாரென்பதைக் காண்கிறோம். ஆனால் காணிக்கை, தசமபாகங்களைக் கொடாமல் தேவனைக் கொள்ளையிட்டவர்கள் அவரை மட்டுமல்ல, தங்களையே கொள்ளையிடுவதால உணர்ந்துகொள்ளச் செய்யப் பட்டார்கள்; ஏனெனில் அவர்கள் கொடைக்குத் தக்கபட் அவர் தமது ஆசீர்வாதங்களையும் அவர்களுக்கு மட்டுப்படுத்தினார். 3T. 393-395. CCh 149.3
கடனிலிருக்கிற ஒருவன் தன் நிர்ப்பந்த நிலைக்கு வருந்தி, தேவனுக்குரிய பாகத்தை எடுத்துத் தான் பிறரிடத்தில் பட்டகடனைத் தீர்க்கக் கூடாது. இப்படிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மூலம், தான் பரீட்சிக்கப்படுவதை அவன் உணர வேண்டும்; CCh 150.1
கர்த்தருடைய பாகத்தை தனக்கென பயன்படுத்துவதால் அவன் கொடுத்தவரைக் (கடவுளை) கொள்ளையிடுகிறான். தனக்குள்ள யாவுக்கும் அவன் தேவனுக்குக் கடனாளி யாயிருக்கிறான்; ஆனால் தான் மனுஷரிடத்தில் பட்ட கடனைத் தீர்க்க அவன் அவர் பாகத்தை உபயோகிப்பதால் இரட்டைக் கடனாளியாகிறான். தேவனுக்கு உண்மையில்லாமை எனப் பரலோக புத்தகத்தில் அவனைக் குறித்து எழுதப்படுகிறது. தன் வசதியின் பொருட்டு கர்த்தருடைய பொருளை உபயோகித்ததற்காக அவன் தேவனிடம் கணக்குக் கொடுக்கவேண்டும். தேவனுடையதில் தவறாக நடந்தது அவனுடைய வாழ்க்கையில் வேறு விஷயங்களிலும் வெளிப்படும். அவனுடைய சொந்த தொழில் முறைகளிலும் காணப்படும். இப்படிப்பட்ட சுபாவத்தை அப்பியாசிக்கும் ஒருவன் மேலான தேவ குடும்பத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளுகிறான். 6T.391. CCh 150.2