சபைகளுக்கு ஆலோசனை

38/326

தேவனோடு ஊழியராயிருக்கும் சிலாக்கியம்

தமது வேலைக்குத் தேவன் மனிதனைச் சார்ந்திருக்கவில்லை. தமது பொக்கிஷ சாலை நிரம்பும்படியான பொருளை அவர் பரலோகத்திலிருந்து அனுப்புவது நன்மையென்று அவர் கண்டால் அவர் அவ்விதமே செய்யக்கூடும். மனிதனின்றி தேவ தூதர்களே சத்தியத்தைப் பரப்பும்படி அவர் திட்டஞ்செய்து கொள்ளலாம். வானத்தில் தமது சத்தியத்தை எழுதி, அவர் எதிர் நோக்கும் ஜீவனுள்ள குணாதிசயங்களை பிரசித்து செய்திருக்கலாம். கடவுள் மனிதனுடைய பொன்னையும் வெள்ளியையும் சார்ந்திருக்கவில்லை. சகல காட்டு ஜீவன்களும், பர்வதங்களில் ஆயரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள் ... நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதன் நிறைவும் என்னுடையவைகளே. என்கிறார். சங். 59:10,12. தமது வேலையின் முன்னேற்றத்திற் கென என்னென்ன ஏதுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவோ, அவை நமது நலங்கருதிய நோக்குடன் செய்யப்பட்டுள்ளன. அவரோடு உடன் ஊழியராயிருக்கும் கண்ணியத்தை அவர் நமக்கு அருளியிருக்கிறார். மனிதர் ஒத்துழைக்கவும் உதாரத்வ குணத்டை அப்பியாசிக்கவும் ஒழுங்கு செய்திருக்கிறார். CCh 146.2

சன்மார்க்கப் பிரமாணத்தில் ஓய்வுநாள் ஆசரிப்பு அடங்கியுள்ளது; அது மீறப்பட்டு, அதனால் தண்டனை வரும்வரை அது பாரமானதல்ல. அப்படியே தசமபாக ஒழுங்கும் அதைக் கைக்கொள்ளுபவர்களுக்குப் பாரமல்ல. எபிரேயருக்கு ஏற்படுத்திய இத்திட்டத்தை அவர் அழிக்கவுமில்லை. தளரவிடவுமில்லை. அது தளரவிடப்படுவதற்குப் பதிலாக, அதிகம், கையாடப்பட்டு, கிறிஸ்துவிலிருக்கும் இரட்சிப்பு கிறிஸ்துவ யுகத்தில் எங்கும் கூறப்ப்ட இத் திட்டம் ஏதுவாக வேண்டும். சுவிசேஷம் பரவி வருகிறது; கிறிஸ்துவின் மரணத்திர்குப் பின் போராட்டத்தைத் தாங்கி நடந்த பெருமிதமாக பொருள் அவசியப்படுகிறது. எனவெ தர்மஞ் ச் செய்தலாகிய நெறி எபிரேய ஆட்சியிலிருந்ததைப் பார்க்கிலும் ஈண்டு அதிகம் அவசியப்படுகிறது. எக் காலத்தையும்விட தேவன் இக்காலம் அதிக காணிக்கைகளை எதிர் நோக்குகிறார். நமக்கருளப்பட்ட ஒளிக்கும் ஆசீர்வாதங்களுக்கும் தக்க அளவில் நம்மிடமிருந்து நன்கொடைகளையும், காணிக்கைகளையும் எதிர் நோக்கும் இலட்சியத்தைக் கிறிஸ்து ஏற்படுத்தியிருக்கிறார். மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்பு விக்கிறார்களோ, அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள் என்றார். ழக். 12:48. 3T. 390-392. CCh 147.1

தேவ வசனத்திலிருந்து ஒளி பிரவாகம் வீசிக்கொண்டிருக்கிறது. அசட்டைப் பண்ணப்பட்டப் தருணங்களை ஆதாயப்படுத்தும் ஓர் எழுப்புதல் உண்டாக வேண்டும். யாவரும் உண்மையான தசமபாகம் காணிக்கைகளைக் கொடுத்தால், இக்காலத்துக்குரிய சத்தியத்தை உலகம் கேள்விப்பட வழி திறக்கப்படும். தேவனுடைய பிள்ளைகள் யாவரும் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டவர்களாய், தற்தியாக சிந்தையுடன் முழு ஊக்கம் காண்பித்தால், அந்நிய நாட்டு வேலைக்கும் உள் நாட்டு வேலைக்கும் தேவை யான பொருளில் குறைவு ஏற்படாது. நமது வருவாய்கள் பெருகும்; நாம் பிரவேசிக்கும்படி அழைக்கும் பிரயோஜனமான வாசல்கள் ஆயிரக் கணக்கில் திறக்கப்படும். கிருபையின் தூது தேவ திட்டப்படி அவருடைய பிள்ளைகளால் கொண்டுபோகப்பட்டிருந்தால், கிறிஸ்து இதற்குள் பூமிக்கு வந்திருப்பார்; பரிசுத்தவான்களும் தேவ நகரத்திற்குள் வரவேற்கப்பட்டிருப்பார்கள். 6T. 449, 450. CCh 147.2