சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம்-54
வியாதியஸ்தருக்காக ஜெபம்
“சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்” என்று வேதாகமம் கூறுகின்றது. லூக். 18.1. சரீரத்தினின்று பெலன் நீங்கி, தங்கள் பிடியினின்று ஜீவன் அகவலுவதாகத் தோன்றினால், அப்பொழுது தான் அதிகமாக ஜெபிக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆரோக்கியமான வாழ்வுடனிருக்கும் பொழுது, அனேகர் ஒவ்வொரு நாளும் பல ஆண்டுகளாக தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிசயமான கிருபையை நினைவு கூராதே போகின்றனர். கர்த்தர் தங்களுக்குச் செய்த நன்மைகளின் பொருட்டு அவரைத் துதி செய்வதில்லை. வியாதிப்படும்பொழுது, கடவுளை நினைக்கின்றனர். மனித பெலன் நீங்கும் பொழுது, தெய்வ உதவி அவசியமென்று உணருகின்றனர். இரக்கமுள்ள நம்முடைய தெய்வம் உண்மையாகவே உதவிக்கென்று தம்மை நாடும் ஆத்துமாவை புறம்பே தள்ளுகிறதில்லை. ஆரோக்கியமுடையவர்களாயிருக்கும் பொழுதும், வியாதிப் படுக்கையிலும் அவரே நமது அடைக்கலமாயிருக்கிறார். CCh 638.1
தமது இஅகலோக ஊழியத்தின் போது எத்தன்மையான உருக்கமுள்ள மருத்துவராக இயேசு பெருமான் விளங்கினாரோ, அவ்வாறே இன்றும் இருக்கிறார். சகல நோய்களையும் பரிகரித்து, ஒவ்வொரு குறைவையும் நீக்கிப்போட வல்ல குணமாக்கும் தைலம் அவரிடத்திலே இருக்கின்றது. அக்காலத்திலே சீஷர்கல் நோய்ப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தித்தது போல, இந்நாளிலும் அவருடையவர்கள் பிரார்த்திக்க வேண்டும். அப்பொழுது நோய்கள் பரிசுரிக்கப்படும். “ஏனெனில் விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக் கும்.” தமக்கென்று பரிசுத்த ஆவியின் வல்லமையும், தேவனுடைய லாக்குந்தத்தங்களைப் பற்றிப் படிக்கக்கூடிய அமர்ந்த விசுவாசத்தின் நிச்சயமும் வைத்து வைக்கப்பட்டிருக்கிறது. “வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கூறும் தெய்வ வாக்கு அப்போஸ்தலருடைய நாட்களில் போலவே, இன்றும் நமது நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருக்கின்றது. தெய்வ பிள்ளைகளின் சிலாக்கியமின்னதென்று அது விளக்குகின்றது. அந்த சிலாக்கியத்தில் அடங்கியுள்ளயாவையும் நமது விசுவாசமானது பற்றிப் பிடிக்க வேண்டும். கிறிஸ்துவின் ஊழியக்காரர் அவருடைய கிரையை நடப்பிக்கப்படுவதற்குரிய ஏதுகரமாக இருக்கின்றனர். அவர்கள் வழியாகத் தமது குணமாக்கும் வல்லமையை வெளிப்படுத்துவதர்கு அவர் விரும்புகின்றார். வியாதியும் துன்பமும் அடைந்தவர்களை விசுவாசமுடைய நமது கரங்களில் ஏந்திக்கொள்ளுவது நம்முடைய ஊழியமாக இருக்கின்றது. பெரும் பரீகாரியிடமாகத் தங்கள் நம்பிக்கையை வைப்பதற்கு நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நாம் வியாதிப்பட்டவர்களையும் நம்பிக்கையற்றோரையும் உபத்திரவமடைந்தோரையும் ஊக்குவிக்க வேண்டுமென்று தெய்வம் விரும்புகின்றார். CCh 638.2