சபைகளுக்கு ஆலோசனை
கிளர்ச்சியூட்டும் வாசிப்பின் ஆபத்துக்கள்
நம் பிள்ளைகள் வாசிக்க வேண்டியவை எவை? இது ஒரு முக்கிய கேள்வி. அதற்கு மிக பக்தி வினயமான விடை அவசியம். ஓய்வுநாள் ஆசரிக்கும் குடும்பத்தினருக்குள் பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களைக் கொடுக்காதப் பத்திரிகைகளு, செய்தித் தாட்களும் காணப்படுவது என்னைப் புண் படுத்துகிறது. இப்படிக் கட்டுக் கதைகளை வாசிக்கப் பிரியப்படுவோர்களைக் கவனித்திருக்கிறேன். அவர்கள் சத்தியத்தைக் கேட்டு, விசுவாசத்திற்குரிய காரணங்களைப் பற்றி பரிச்சயமாகும். சிலாக்கியங்களைப் பெற்றிருக்கிறார்கள்; ஆனால் மெய் பக்தியும், நடை முறையில் தேவ பக்தியுமின்றி வளர்ந்திருக்கிறார்கள். CCh 462.2
மூடத்தனமானதும், மனக் கொதிப்புண்டாக்குவதுமான கதைகளை வாசிப்பவர்கள் வாழ்க்கைக் கடமைகளைச் செய்யஹ் தகுதி யற்று போகிறார்கள். அவர்கள் யதார்த்தமில்லா உல கில் வாழ்கிறார்கள். இப்படிப்பட்டக் கதைகளை வாசிக்க அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளை நான் கவனித்திருக்கிறேன். வீட்டிலிருந்தாலும், வெளிச் சென்றிருந்தாலும், அவர்கள் பரபரப்புடன், மனோராஜ்யஞ் செய்கிறவர்களாக, பொதுவான விஷயங்களைப் பற்றியே அல்லாமல் வேறெதையும் குறித்துப் பேசக்கூடாதவர்களாயிருக்கிறார்கள். மார்க்கக் கருத்துக்களும், சம்பாஷணைகளும் அவர்கள் மனசுக்கு முற்றிலுமே அந்நிய காரியம். மனக் கிளர்ச்சிகளை உண்டுபண்ணும் கதைகளை வாசிப்பதில் பழக்குவிக்கப்படுவதினால் மனச்சுவை தப்பு வழியில் செலுத்தபப்ட்டு, அந்த ஆரோக்கிய மற்ற உணவையன்றி திருப்தியடைவதில்லி. இப்படிப்பட்டவர்களி மன வெறியர்கள் என்றழைப்பதை விட வேறு தக்க பெயர் எனக்குத் தென்படவில்லை. இப் பழக்கம், மிதமிஞ்சி புசித்துக் குடிக்கம் பழக்கம் போன்று கேடுகளை மூளையில் உண்டாக்குகிறது. C.T. 132-135. CCh 462.3
நிகழ்கால சத்தியத்தை ஏற்றுக்கொள்ளு முன் சிலர் நாவல்களை வாசிக்கும் பழக்கமுடையவர்கள் சபையில் சேர்ந்தபின் இப் பழக்கத்தை விட்டுவிட முயன்றனர். இப்படிப் பட்டவர்கள் முன் அவர்கள் புறக்கணித்த நூல்களை வைப்பது வெறியன் முன் வாகிரிகளை வைப்பது போலாகும். அவர்கள் முன்னிருக்கும் சோதனைகளுக்குத் தொடர்ந்து ஆளாகுவதினால், சீக்கிரம் ஸ்திரமான வாசிப்புகளில் சுவையில்லாமற் போகும். வேதம் வாசிக்க வாஞ்சை கிடையாது. அவர்களுடைய சன்மார்க்க சக்தி பலவீனப்படுகிறது. பாவத்தில் வெறுப்பு நாளடைவில் குறைந்து காணப்படுகிறது. உண்மையற்ற வாழ்க்கை அதிகரித்து. வாழ்க்கை கடமைகளைச் செய்ய வாஞ்சையற்றுப் போகிறது. மனம் தவறான நெறியில் செல்வதினால், மனக்கிளர்ச்சி தரும் தன்மையுடைய வாசிப்புகளை விரைந்து பிடிக்கிறது. இவ்விதமாக ஆத்துமாவைத் தன் ஆட்சிக்குட்படுத்தச் சாத்தானுக்கு வழி திறக்கப்படுகிறது. 7T. 203. CCh 463.1