சபைகளுக்கு ஆலோசனை
ஆத்துமாவை நாசமாக்கும் வாசிப்பு
அச்சாலைகளிலிருந்து வெளிவரும் ஏராளமானவைகளை விருத்தாப்பியரும் வாலிபரும் அவசரமாகவும், மேற்பரப்பாகவும் வாசிக்கும் பழக்கத்தினால் மனசு தொடர்ந்து ஆழ்ந்து சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறது. அத்துடன் எகிப்தின் தவளைகளைப் போல நாட்டில் வெளி வரும் பெரும்பாலான பத்திரிகைகளும் புத்தகங்களும் கீழ்த்தரமும், சோம்பலும், நரம்புத் தளர்ச்சியும் கொடுப்பது மட்டுமல்ல, அசுத்தமும் இழிவுமானவை. அவைகளின் பலன் மனதை வெளிகொள்ளச் செய்து கெடுப்பது மட்டுமல்ல, ஆத்துமாவையும் கறைப்படுத்தி நாசப்படுத்துகிறது. Ed. 189, 190. CCh 461.1
சிறுவர் கல்வியில் கூளிப் பேய்க் கதைகளும், புராணக் கதைகளும், கட்டுக் கதைகளும் பெருவாரியாக இடம் பெறுகின்றன. இப்படிப்பட்ட புத்தகங்கள் பள்ளிக்கூடங்களில் உபயோகப்படுகின்றன. அனேக வீடுகளிலும் காணப்படுகின்றன. பொய்களால் நிரம்பிய புத்தகங்களை உபயோகிக்க எப்படி கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கக்கூடும்? பெற்றோர் உபதேசங்களுக்கு மாறான கருத்துகள் கதைகளில் காணப்படுவதைப் பற்றி பிள்ளைகள் கேட்கும் போது உத்தரவு அவை மெய்யல்ல என்பதேயாம். அப்படிச் சொல்வதினால் அதை உபயோகிப்பதின் திறமையை விலக்கிவிடுவதில்லை. இந்நூல்களில் காணப்படும் கருத்துக்கள் பிள்ளைகள் தவறான வழியில் நடத்தும். அவைகள், வாழ்க்கையைத் தவறாக நோக்கவும், பொய்யைப் பிறப்பித்து, வரைவுஞ் செய்கின்றன. CCh 461.2
சத்தியத்தைப் புரட்டும் நூல்களைச் சிறுவர், வாலிபர் கைகளில் கொடுக்கலாகாது. கல்வி பெறும்போது பாவத்தை விளைக்கும் விதைகள் அடங்கிய கருத்துக்களைப் பெறாதிருப்பார்களாக. C.T. 384, 385. CCh 461.3
இல்லை வாதிகளின் நூல்களைப்பற்றியும் நாம் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். அவைகள் சத்தியத்திற்கு விரோதமான சத்துருவின் கிரியைகள் ஆகும்; ஆத்துமாவை நாசப்படுத்தாமல் அவைகள் வாசிக்கப்பட முடியாது. அதனால் தாக்கப்பட்ட சிலர் கடைசியாக சொஸ்தமடைய கூடுமென்பது உண்மையே; ஆனால் அவைகளில் தீயச் செல்வாக்கோடு விளையாடி, சாத்தானுடைய எல்லைக்குட்படுகிறார்கள்; அவன் தன்னாலான யாவையும் செய்கிறான். அவனுடைய சோதனைகளை வரவழைக்கும் போது, அவைகளைப் பகுத்துணரவும், எதிர்க்கவும் கூடாமற் போகிறார்கள். மயக்கி வசீகரிக்கும் சக்தி, அவிசுவாசம், ஐயவாதம் அவர்கள் மனதில் பலமாய் ஊன்றக் கட்டப்படுகின்றன. C.T.135, 136. CCh 462.1