கிறிஸ்தவச் சேவை

115/289

அடிப்படையான நடைமுறை விஷயங்களைக் கவனியுங்கள்

பவுல் மிகத்திறமையாகப் பேசக்கூயவனாக இருந்தான். தான் மனம்மாறுவதற்கு முன்பு, தன் பேச்சைக் கேட்டவர்களை தன் பேச்சுத்திறமையால் கவர்ந்திழுக்க பிரயாசப்பட்டான். இப்போது அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டான்; கவிதை நடையில் விவரிப்பதை விட்டுவிட்டான்; புலன்களைத் திருப்திப்படுத்தி, கற்பனைக்குத் தீனிபோடுகிறதை விட்டுவிட்டான்; அனுதின அனுபவத்திற்கு சம்பந்தமில்லாதவற்றை கவர்ச்சியாக எடுத்துக்காட்டுவதை விட்டுவிட்டான். மாறாக, முக்கியமான வார்த்தைகளை சாதாரண வார்த்தைகளால் மக்களுடைய இருதயங்களில் உணர்த்த பிரயாசப்பட்டான். சத்தியத்தை கவர்ச்சிகரமான விதத்தில் சொல்லுவது ஒரு பரபரப்பான உணர்வை உண்டாக்கலாம்; ஆனால் பெரும்பாலும், இவ்வாறு முன்வைக்கப்படுகிற சத்தியமானது வாழ்க்கையின் போராட்டங்களை விசுவாசி சந்திக்கும்படி அவனைப் பெலப்படுத்துவதில்லை; வலுப்படுத்துவதற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுப்பதில்லை. கிறிஸ்தவமார்க்க அடிப்படை நியதிகளில் உறுதியாகவும், நடைமுறை ரீதியாகவும் போதிக்கப்பட்டு, உடனடித் தேவைகளையும், தற்போதைய பாடுகளையும், ஆத்துமப் போராட் டத்தையும் எதிர்கொள்ள அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். 1 TamChS 166.3