கிறிஸ்தவச் சேவை
நெருங்கிப் பழகுங்கள்
கிறிஸ்துவுடன் பணிபுரியும் அனைவருக்கும் சொல்கிறேன். எந்த வீடுகளுக்குளெல்லாம் நுழையமுடியுமோ, அங்கெல்லாம் வேதாகமத்தை எடுத்துச் சென்று, சத்தியத்தைச் சொல்லுங்கள். உங்கள் அறிவாலும் ஆற்றலாலும் அல்ல, பிறர் உள்ளத்தை தொடுவதால் மட்டுமே நீங்கள் வெற்றிபெற முடியும். பிறரோடு நன்கு பழகி அவர்களை நெருங்கி வரவேண்டும். இதன் மூலமாகத்தான் அவர்கள் எண்ணங்களை மாற்றமுடியும். திறந்தவெளியில் பயணிகளுக்குச் சொல்வதைக் காட்டிலும், அரங்கங்களிலும் ஆலயங்களிலும் பிரசங்கிப்பதைக் காட்டிலும், வீடுகளிலும் சிறு கூட்டங்களிலும் குடும்பங்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்துவது நல்ல வெற்றியைத் தரும். 1 TamChS 162.4
மனிதகுலத்தின் நலன்களுக்காக கிறிஸ்து வேலை செய்தார். அவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும் அனைவரும், அவருடைய கிருபையின் நற்செய்தியைப் பெற்ற அனைவரும் அவர் செய்தபடியே செய்யவேண்டும். பொது வைபவங்களில் நாம் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடாது. மற்றவர்களிடமிருந்து நாம் ஒதுங்கக்கூடாது. அந்தந்த மக்களை அவரவர் இருக்கும் இடத்தில் சந்திக்கவேண்டும். அவர்கள் தாங்களாக நம்மிடம் எளிதில் வரமாட்டார்கள். தேவசத்தியத்தால் மனிதரைத் தொடுவதற்கு பிரசங்கம் மாத்திரமல்ல, வேறே வழியும் உண்டு. எளிமையான வழியாக இருந்தாலும், அதில் வெற்றி வாய்ப்பு அதிகம். சிறியோர் வீட்டிலும் அதைச் செய்யலாம்; விருந்துகளிலும், பாவமற்ற பொழுதுபோக்குகளும் இதைச் செய்யலாம்; பெரியோர் அரண்மனையிலும் அதைச் செய்யலாம். விருந்துகளிலும், பாவமில்லாப் பொழுதுபோக்குகளிலும் இதைச் செய்யலாம். 2 TamChS 163.1
மற்றவர்களிடமிருந்து பரிசேயர்கள் தங்களைப் பிரித்துக் காட்டுவதற்கு பல கடுமையான விதிகளை வைத்திருந்தார்கள். கிறிஸ்து அவ்வாறு தம்மை ஒதுங்கவில்லை. இதனால் பரிசேயர் அவரை வெறுத்தார்கள். மதம் என்பது பெரிய பிரிவினைச் சுவராக நின்று, மக்களிடமிருந்து பிரிந்து நின்றது. இந்தச் சுவரை இயேசு உடைத்தெறிந்தார். மனிதர்களைப் பார்த்தபோது, “உங்கள் நம்பிக்கை என்ன? நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்?” என்று அவர் கேட்கவில்லை. உதவி தேவைப்படும் அனைவருக்கும் அவர் உதவி செய்தார். தமது பரலோகத் தன்மையைக் காண்பிப்பதற்காக அவர் ஒரு துறவியின் குகையில் புகுந்துகொள்ளவில்லை. அவர் மனிதகுலத்திற்காக கருத்தோடு உழைத்தார். உடலை வருத்துவது அல்ல வேதாகம மார்க்கம். சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் மட்டும் வெளிப்படுவது அல்ல தூய்மையான மார்க்கம். எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் மனிதர்மேல் தமக்கிருந்த அக்கறையை அவர் வெளிப்படுத்தினார். தம்மைச் சுற்றிலும் மகிழ்ச்சியான பக்தியின் வெளிச்சத்தைப் பொழிந்தார். 3 TamChS 163.2
யூதர்களின் தப்பெண்ணங்களைத் தாண்டி, ஒதுக்கப்பட்ட இந்த மக்களின் விருந்தோம்பலை அவர் ஏற்றுக்கொண்டார். அவர்களுடைய வீடுகளில் தங்கினார்; அவர்களோடு பந்தியில் உட்கார்ந்தார்; அவர்கள் தயாரித்து, பரிமாறிய உணவைச் சாப் பிட்டார் அவர்களுடைய தெருக்களில் பிரசங்கம்பண்ணினார். அவர்களைக் கனிவோடும் மரியாதையோடும் நடத்தினார். 1 TamChS 163.3