கிறிஸ்தவச் சேவை

109/289

மக்களிடம் செல்லுங்கள்

ஆத்துமாக்கள் நம்மிடம் வரும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை; அவர்கள் இருக்கும் இடத்திற்கு அவர்களைத் தேடி, நாம் செல்லவேண்டும். பிரசங்கத்தின்போது, ஆத்துமாவில் வேலை துவங்குகிறது. ஆனால், சிலர் இருக்கிறார்கள்; தனியாக உட்கார்ந்து அவர்களுடன் பேசாவிட்டால், அவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 1 TamChS 161.3

ஊழியக்கட்டளையானது கிறிஸ்து ராஜ்யத்தின் சிறந்த சாசனம். சீடர்கள் ஆத்துமாக்களுக்காக ஆர்வத்துடன் உழைத்து, இரக்கத்தின் அழைப்பைக் கொடுக்கவேண்டியிருந்தது. மக்கள் தங்களிடம் வருவார்கள் என்று அவர்கள் காத்திருக்கவில்லை; அவர்கள் தங்கள் செய்தியுடன் மக்களிடம் செல்லவேண்டியிருந்தது. 2 TamChS 162.1