கிறிஸ்தவச் சேவை

95/289

கிறிஸ்தவச் சேவையின் துவக்க வீரர்களுக்கான ஊக்கம்

சிறு காரியங்களில் தேவனைச் சேவிக்கிறபணியைச் சந்தோஷமாக ஏற்கிறவர்கள்தாம் வெற்றிகரமான பணியாளர்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை எனும் நூலால் நெய்து துணியின் சித்திரவேலையை முடிக்கவேண்டும். 2 TamChS 134.1

அர்ப்பணிப்போடு செயல்படவும், பயனுள்ளவர்களாக மாறவும் நாம் செய்யவேண்டிய அனுதின கடமைகளை நாம் செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் நித்தியத்தின் வெளிச்சத்தில் நம் பணியைப் பார்க்கவேண்டும். 3 TamChS 134.2

தம் மாபெரும் திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தேவன் ஓர் இடம் வைத்திருக்கிறார். நமக்கு அவசியமற்ற தாலந்து எதையும் அவர் நமக்குத் தருவதில்லை. 4 TamChS 134.3

பரலோகத்தின் நித்திய திட்டத்திலே அவனவனுக்கு ஓர் இட முண்டு. ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக அவனவன் கிறிஸ்து வோடு ஒத்துழைத்துப் பணியாற்றவேண்டும். பரலோக வாச ஸ்தலங்களில் நமக்காக ஓரிடம் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது எவ்வளவு நிச்சயமோ, அதுபோல தேவனுக்காக ஊழியம்செய் யும்படிஒருவிசேஷித்த இடமாக இந்தப்பூமிநியமிக்கப்பட்டுள்ளதும் நிச்சயம். 1 TamChS 134.4

தம் மக்கள் ஒவ்வொருவரையும் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். நம் ஒவ்வொருவரையும் குறித்து திட்டம் வைத்துள்ளார். 2 TamChS 135.1

இந்தப் பணியில் எல்லாருமே ஏதாவது செய்யமுடியும். ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக சுயநலமின்றியும் ஊக்கமாகவும் பிரயாசப்படாவிட்டால் ஒழிய தேவனுக்கு முன் யாரும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படமாட்டார்கள். 3 TamChS 135.2

உங்கள் கடமையை நீங்கள் வெறொருவர்மேல் சுமத்த முடியாது. வேறு யாருமல்ல, நீங்கள்தாம் உங்கள் வேலையைச் செய்ய முடியும். நீங்கள் உங்கள் வெளிச்சத்தை வீசாவிட்டால், நீங்கள் காட்டிய அலட்சியத்தால் யாராவது ஒருவர் இருளில் விடப்படுவார். 4 TamChS 135.3

தேவனுடைய அழைப்பிற்கு கீழ்ப்படியும் தாழ்மையான ஊழியன் தெய்வீக உதவியை நிச்சயம் பெறுவான். அத்தகைய பெரிதும் பரிசுத்தமுமான பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதானே குணத்தை மேம்படுத்தும். மேலான மன ஆவிக்குரிய திறன்களை செயல்படத் தூண்டி, மனதையும் இதயத்தையும் பெலப்படுத்தி, சுத்திகரிக்கும். தேவவல்லமையில் விசுவாசம் வைப்பதால், பெலவீனன் பெலவானாக மாறுவதும், தன் முயற்சிகளில் திடமனதோடு விளங்குவதும், மாபெரும் பலன்களைப் பெறுவதும் அற்புத அனுபவம். முதலில் குறைந்த அறிவுள்ளவனாக இருக்கும்போது, தனக்குத் தெரிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டும், அதே சமயத்தில், அதிகமான அறிவைப் பெறவும் கருத்தோடு பிரயாசப்படுகிறவன், பரலோகப் பொக்கிஷம் முழுவதும் தனக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள்வான். எவ்வளவுக்கு அதிகமாக பிறருக்கு வெளிச்சத்தைக்காட்ட முயல்கிறானோ, அவ்வளவுக்கு அதிகமாகவெளிச்சத்தைப் பெறுவான். ஆத்துமாக்கள் மேலுள்ள அன்பால் வேதாகம வசனத்தை அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயலுவான்; அப்போது, அதிகமாக அதைக்குறித்த தெளிவைப் பெறுவான். நம் அறிவை அதிகமாகப்பயன்படுத்தி, நம் ஆற்றல்களை உபயோகிக்கும்போது, அதிக அறிவையும் ஆற்றலையும் பெறுவோம். 5 TamChS 135.4

ஒவ்வொருவரும் தேவனுக்காகவும் ஆத்துமாக்களுக்காகவும் பிரயாசப்படவேண்டும்; ஒவ்வொருவரும் ஞானத்துடன் செயல்பட வேண்டும், சோம்பேறியாக இருக்கக்கூடாது; வேலைசெய்ய ஒருவர் தன்னை அழைக்கும் வரை காத்திருக்கக்கூடாது. உங்களை வேலைக்கு அழைக்கிற அந்த ஒருவர் ‘அளவுக்கதிமான பொறுப்புகளுடையவராக இருப்பார்; அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும்போது நேரம் விரயமாகும். சீர்திருத்தத்திற்கான ஞானத்தை உடனடியாக தேவன் தருவார்; ஏனென்றால்,’ மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய்’ ‘இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்’ என்கிறது எபி 3:7,8. எவ்வளவு கனிவு! எவ்வளவு மனதுருக்கம்! மேலும், எவ்வளவு அவசரம்! அவருடைய அழைப்பு ஒரு கட்டளையாகவும் இருக்கிறது. 1 TamChS 135.5

தீவிரமாகச் சேவை செய்யும்போது, தீமையை எதிர்ப்பதற்கான பெலன் கிடைக்கிறது. 2 TamChS 136.1

நியாயம், இரக்கம், தயாளத்தோடு செய்யப்படுகிற ஒவ்வொரு செயலும் பரலோகத்தில் இசையாகத் தொனிக்கிறது. 3 TamChS 136.2

கிறிஸ்துவின் ஆவி நற்செய்திப் பணியின் ஆவியாகும். மற்றவர்களை இரட்சகரிடம் கொண்டு வருவதே புதுப்பிக்கப்பட்ட இருதயத்தின் முதல் உணர்வாக இருக்கும். 4 TamChS 136.3

கிறிஸ்து நம்மைச் செய்யச் சொல்லியுள்ள பணியை ஆர்வமாகச் செய்வதே கிருபையில் வளருவதற்கான ஒரே வழி. 5 TamChS 136.4

தேவனுக்காக வேலைசெய்யப் புறப்படுவதற்குமுன் மிகப் பெரியதருணங்கள் நிகழவோ,அசாதாரணதிறன்கள் கிடைக்கவோ காத்திருக்கக்கூடாது. 6 TamChS 136.5

சமுதாயத்திற்கு ஆசீர்வதமாக, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்கிறவன் கற்றவனாகவோ கல்லாதவனாகவோ இருந்தாலும் தன் திறன்களை எல்லாம் தேவசேவைக்கும் தன் சகமனிதர்களின் சேவைக்கும் பயன்படுத்துகிறான். 7 TamChS 136.6

மிகச்சிறந்த பணியை நிறைவேற்ற தேவன் தகுதிப்படுத்தி யிருக்கிற அநேகர் மிகக் குறைவாகவே செய்கிறார்கள். ஏனென் றால், அவர்கள் மிகக்குறைவாகவே முயற்சிசெய்கிறார்கள். 8 TamChS 136.7

நூற்றில் தொன்னூற்றொன்பது தடவை தோல்வியடைந்து, ஒரே ஓர் ஆத்துமாவை அழிவிலிருந்து காப்பாற்றினாலும், எஜமா னின் நோக்கத்திற்காக மிக உயர்வான ஒருசெயலைச் செய்கிறீர்கள். 1 TamChS 136.8

தேவனுக்கும் ஒவ்வோர் ஆத்துமாவுக்கு இடையேயுள்ள உறவு சந்தேகமே இல்லாத அளவுக்கு முழுமையானது. எப்படியென்றால், பூமியில் வேறொரு ஆத்துமாவே இல்லாததுபோல அதைக் கண்காணிக்கிறார்; வேறு ஆத்துமாவே இல்லாததுபோல தம் பிரிய குமாரனைக் கொடுத்திருக்கிறார். 2 TamChS 137.1

ஆண்டவர் உங்களைக் காண்கிறார்; புரிந்துகொள்கிறார்; நீங்கள் உங்களுடைய தாலந்தை தேவசேவைக்காகப் பரிசுத்தப்படுத்தின ஓர் ஈவாக ஒப்புக்கொடுத்தால், உங்களுடைய பெலவீனத்திற்கு மத்தியிலும் அவர் உங்களைப் பயன்படுத்துவார். ஏனென்றால், தன்னலம் பாராமல் தீவிரமாகச் செயல்படுவதால் பெலவீனன் பெலவானாகிறான்; அவருடைய மேலான பாராட்டைப் பெற்று மகிழ்கிறான். கர்த்தருடைய மகிழ்ச்சியே பெலத்தின் அடிப்படைக் கூறாகும். நீங்கள் உண்மையாக இருந்தால், எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானம் இந்தப் பூமியில் உங்களுடைய பலனாகக் கிடைக்கும். மேலும் எதிர்கால வாழ்விலும் உங்களுடைய ஆண்டவரின் சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கலாம். 3 TamChS 137.2

மிகக்குறைவான தாலந்துகளைப் பெற்றிருந்தாலும், தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கதங்கள் இருதயங்களை உண்மையோடு காக்கிறவர்கள், கிறிஸ்துவுக்காக பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தலாம். ஹார்லன் பேஜ் என்பவர் பெரிய கல்விமான் இல்லை. சாதாரண திறன் படைத்த ஒரு இயந்திரப் பணியாளர். ஆனால், தேவநோக்கத்திற்காக உழைப்பதையே தன் பிரதான வேலையாகக் கொண்டார். அவருடைய முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தன. தன் சகமனிதர்களோடு தனிமையில் பேசியும் ஊக்கமாக ஜெபித்தும் அவர்களுடைய இரட்சிப்புக்காக ப்பிரயாசப்பட்டார். ஜெபக்கூட்டங்களுக்கு ஏற்பாடுசெய்தார், ஞாயிறு பள்ளிகளை ஒழுங்கு செய்தார். துண்டுப்பிரதிகளையும் பிற விசுவாசப் பிரசுரங்களையும் விநியோகித்தார். மரணத்தருவாயில், நித்தியத்தின் சாயல் தன் முகத்தில் மிளிர, “இது அனைத்துமே நான் செய்த எந்தப் புண்ணியத்தாலும் அல்ல, தேவகிருபையால் சாத்தியமாயிற்று. ஆனால் என்னைக் கருவியாகப் பயன்படுத்தி நூறு ஆத்துமாக்களுக்குமேல் தேவன் இரட்சித்தார் என்பதை ஆதாரத்தோடு சொல்லமுடியுமென நினைக்கிறேன்” என்றார். 4 TamChS 137.3

இந்த உலகம் கிறிஸ்தவனின் பரலோகம் அல்ல, மாறாக தேவனுடைய பணிமனைதான். பரிசுத்தப்பரலோகத்தில் பாவமற்ற தூதர் க ளோடு சேர்ந்து வாழ்வதற்கு இங்கு நாம் தகுதிப்படுகிறோம். 4 TamChS 137.4

இயேசுவின் சீடர்களில் அதிக தாழ்மையும் எளிமையுமான வரும்கூட மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம். தாங்கள் செய்வது உண்மையிலேயே மகத்தானதுதானா என்று அவர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால், தாங்கள் அறியாத தங்கள் செல்வாக்கினால் ஆசீர்வாத அலைகளை உருவாக்கலாம். அது பரந்து விரிந்து செல்லும். அந்த விளைவுகளின் ஆசீர்வாதத்தை இறுதிப் பிரதிபலன் கொடுக்கப்படுகிற நாளில் தான் அவர்கள் தெரிந்துகொள்ளக்கூடும். தாங்கள் பெரிதாக எதுவும் செய்வதாக அவர்கள் உணராமலோ அறியாமலோ இருக்கலாம். வெற்றி குறித்த கவலையால் தங்களை வருத்தத் தேவையில்லை. தேவயோசனைப்படி நியமிக்கப்பட்ட ஊழியத்தை உண்மையோடும் அமைதியாகவும் தொடர்ந்து செய்தால் மட்டும் போதும். அவர்கள் ஜீவியம் வீண் போகாது; கிறிஸ்துவின் சாயலில் அதிகதிகமாக வளர்வார்கள். அவர்கள் இவ்வாழ்க்கையில் தேவனோடு உடன் வேலையாட்களாய் இருக்கிறார்கள். மறுமைவாழ்வின் மெய்யான மகிழ்ச்சிக்கும் உயர்வான வேலைக்கும் தகுதிபெறுகிறார்கள். 1 TamChS 138.1

கிறிஸ்துவுக்கு தங்களை அர்ப்பணித்திருந்தும், அவருக்காக மகத்தான ஊழியத்தையோ மாபெரும் தியாகத்தையோ செய்வதற்கு வாய்ப்பின்றி பலர் இருக்கிறார்கள். இவர்கள் சிந்தித்து, ஆறுதலடையக்கூடிய ஒரு விஷயம் உள்ளது. அதாவது தன்னையே அர்ப்பணித்து இரத்தசாட்சியாக மரிப்பவரே தேவனுக்கு மிகவும் பிரியமானவர் என்பது உண்மையல்ல; தினமும் ஆபத்தையும் மரணத்தையும் எதிர்கொள்கிற ஊழியப்பணியாளர்தான் பரலோகப்பதிவில் முதன்மையானவராக இருப்பார் என்பதும் உண்மையல்ல. தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அனுதினமும் சுயத்தைச் சரணடையச் செய்து, நோக்கத்தில் உண்மையும் சிந்தனையில் தூய்மையும் உள்ளவராக, கோபத்திலும் சாந்தகுணத்தைக் காத்துக் கொள்பவராக, சிறு காரியத்திலும் விசுவாசத்தையும் பயபக்தியையும் உண்மை தன்மையையும் காட்டுபவராக, குடும்பவாழ்க்கையில் கிறிஸ்துவின் குணத்தை வெளிப்படுத்துபவராக வாழ்கிற கிறிஸ்தவனே உலகப்புகழ்பெற்ற ஊழியப்பணியாளனையும் அல்லது இரத்தச்சாட்சியையும் விட விலையேறப்பெற்றவன். 2 TamChS 138.2

‘எவ்வளவு வேலை செய்யப்பட்டது? அதன் விளைவு என்ன?’ என்பதை வைத்தல்ல; என்ன மனநிலையில் செய்யப்பட்டது என்பதை வைத்தே தேவன் நம் வேலையை மதிப்பிடுகிறார். 3 TamChS 138.3

மேன்மையான வேலையைச் செய்வதாலோ, மேலான பலவற்றைப் பெறுவதாலோ அல்ல, சிறுகாரியங்களிலும் உண்மையோடு இருப்பதை வைத்தே எஜமான் அங்கீகரிக்கிறார். பெரிய சாதனைகள் அல்ல, என்ன நோக்கத்தோடு செயல்படுகிறோம் என்பதே தேவனுடைய பார்வையில் முக்கியமானது. செய்து முடித்த வேலையின் அளவைவிட, எவ்வளவு நல்லெண்ணத்தோடும் உண்மையோடும் செய்தோம் என்பதைத்தான் அவர் பெரிதாக எண்ணுகிறார். 1 TamChS 139.1

சிறு காரியங்களை அலட்சியம் செய்துவிட்டு, பெரிய பணியை எதிர்பார்க்காதீர்கள். சிறிய வேலையை நீங்கள் வெற்றிகரமாகச் செய்யலாம், ஆனால், பெரிய வேலையில் அடியோடு தோற்று, முற்றிலும் ஏமாற்றத்திற்கு ஆளாகலாம். எங்காவது பணிசெய்ய வேண்டியிருந்தால், அதைச் செய்யுங்கள். நீங்கள் ஏழையாகவோ பணக்காரனாகவோ உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ இருந்தாலும், தமக்காக தீவிரமாகச் சேவை செய்யுமாறு தேவன் அழைக்கிறார். உங்கள் கைக்குச் செய்யும்படி நேரிடுவதை முழுப் பெலத்தோடு செய்வதால் தாலந்தையும் பணித்திறனையும் மேம்படுத்துகிறீர்கள். உங்கள் அனுதின வாய்ப்புகளை நிராகரிப்பதால் நீங்கள் பயனற்று, வாடிப்போகிறீர்கள். இதனால்தான் கர்த்தருடைய தோட்டத்தில் ஏராளமான கனிதராத மரங்கள் உள்ளன. 2 TamChS 139.2

நாம் பெற்றுள்ள ஒவ்வொரு வரத்தையும் பயன்படுத்துவதை ஆண்டவர் விரும்புகிறார். அவ்வாறு செய்தால், நாம் பயன்படுத்துவதற்கு மேலான வரங்களைப் பெறலாம். நமக்கு இல்லாத தகுதிகளை அசாதராணவிதத்தில் அவர் தரமாட்டார். ஆனால் நமக்கு உள்ளதை நாம் பயன்படுத்தும்போது, நம் ஒவ்வொரு மனத்திறனையும் அதிகரித்து, பெலப்படுத்த நம்மில் கிரியை செய்வார். எஜமானின் சேவைக்காக முழு மனதோடும் ஊக்கத்தோடும் செய்யப்படும் ஒவ்வொரு தியாகமும் நம் திறன்களை அதிகரிக்கும். 3 TamChS 139.3

எல்லாவிதத்திலும் எளிமையாக இருப்பவர்களைக் காணும் போது கிறிஸ்துவின் இருதயம் களிப்படைகிறது; துஷ்பிரயோகத்திற்கு ஆளான சாந்த குணமுள்ளவர்களை நோக்கும்போது கிறிஸ்துவின் இருதயம் களிப்படைகிறது; நீதியைப் பெறவில்லையே என்கிற மனக்குறையோடு நீதியின்மேல் பசிதாகத்தோடு இருப்பவர்களைப் பார்க்கும்போது, கிறிஸ்துவின் இருதயம் களிப்படைகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பிற போதகர்கள் அதைரியப்பட்டுப் போவார்கள்; இயேசுவோ இந்தச் சூழ்நிலைகளிலும் விருப்பத்தோடு வேலைசெய்தார். 4 நம் வீட்டிலோ வீட்டுக்கு அருகிலோ கிறிஸ்துவுக்காகச் செய்ய வேண்டிய கடமை இருந்தால், அந்த இடத்தைவிட்டு கிறிஸ்துவை அறியாத நாடுகளுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. வீட்டிலும் சபையிலும் சமுதாயத்திலும் தொழிலிலும் நம்மோடு இருக்கிறவர்களிடம் இந்த ஊழியத்தைச் செய்யலாம். 1 TamChS 139.4

கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் நம் வாழ்க்கையின் ஆராய்ச்சியாக ஆக்கினால், கடந்துபோகும் ஒவ்வொரு நிகழ்வும் சுவாரசியமான பிரசங்கப் பகுதியாக இருக்கும். 2 TamChS 140.1

இப்பூலோக வாழ்க்கைதான் பரலோக வாழ்க்கைக்கான துவக்கம். பூலோகக் கல்விதான் பரலோக நியதிகளுக்கான துவக்கம். இங்குள்ள வாழ்க்கைப்பணிதான் அங்குள்ள வாழ்க்கைபணிக்கான துவக்கம். இப்போது நம் குணத்திலும் பரிசுத்த சேவையிலும் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதுதான் இனி எப்படிப்பட்டவர்களாக இருப்போம் என்பதற்கான முன்னடையாளம். 3 TamChS 140.2

கிறிஸ்துவோடு சேர்ந்து சேவைசெய்கிற சிலாக்கியத்தைப் புறக்கணிக்கிறவர்கள் அவருடைய மகிமையில் அவரோடு பங்கேற்பதற்கான ஒரே பயிற்சியைப் புறக்கணிக்கிறார்கள். இந்த வாழ்க்கையில் பெலத்தையும் உயர்வான குணத்தையும் கொடுக்கிற பயிற்சியை அவர்கள் நிராகரிக்கிறார்கள். 4 TamChS 140.3

சுயநலமாக வாழ்ந்து, சுய நன்மைக்காக சேவை செய்தபிறகு, கர்த்தருடைய சந்தோஷத்திற்குள்ளும் பிரவேசிக்கலாமென எவரும் நினைக்க வேண்டாம். சுயநலமற்ற அன்பின் சந்தோஷத்தில் அவர்கள் பங்கெடுக்கவே முடியாது. பரலோகத்தில் நிரம்பியுள்ள அந்த அன்பின் சூழலை அவர்கள் புரிந்துகொள்ளவே முடியாது. தேவதூதர்களின் இன்குரலும் அவர்களது சுரமண்டலங்களின் இசையும் இவர்களைத் திருப்திப்படுத்தாது. பரலோக அறிவியல் இவர்களுடைய சிந்தைகளுக்கு புரியாத புதிராகவே இருக்கும். 5 TamChS 140.4

யாருமே இல்லாத கடற்கரையில் உடைந்து ஒதுங்கிய கப்பற்பாகங்களைப் போல, எல்லா தேசங்களிலும் ஆங்காங்கே பாவத்தால் அழிந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு பொறுமையாகவும் விடாமுயற்சியோடும் ஊழியம் செய்ய கிறிஸ்து அழைக்கிறார். கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெறுகிறவர்கள் அவருடைய ஊழியத்திலும் பங்குகொண்டு, சோர்வாகவும் நிர்ப்பந்தமாகவும் பெலவீனமாகவும் இருப்பவர்களுக்கு உதவவேண்டும். 6 TamChS 140.5

சாமானிய மக்கள் ஊழியம்செய்யவேண்டும். மனிதர்களுடைய துக்கங்களில் இரட்சகர் பங்குகொண்டதுபோல, தங்கள் சக மனிதர்களுடைய துக்கங்களில் பங்கு கொள்ளும்போது, தேவனும் தங்களோடிருந்து கிரியை செய்வதை விசுவாசத்தால் காண்பார்கள். 1 TamChS 141.1

ஒவ்வொரு சீடனையும் கிறிஸ்துவைப்போல மாற்றுவதற்கு ஓர் ஓவியமாதிரியாக அவனுக்குள் அமர்ந்திருக்கிறார். ஒவ்வொருவரும் ‘தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு’ முன் குறித்திருக்கிறார். கிறிஸ்துவின் நீடிய பொறுமையுள்ள அன்பும் பரிசுத்தமும் சாந்தமும் இரக்கமும் சத்தியமும் ஒவ்வொருவரிலும் காணப்பட்டு, உலகத்தில் வெளிப்பட வேண்டும். 2 TamChS 141.2

ஊழியம் எனும் பலிபீடத்தின்மேல் சகலத்தையும் அர்ப்பணிக்கவேண்டிய அழைப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாம் அனைவருமே எலிசாவைப்போல ஊழியம்செய்ய அழைக்கப்படவில்லை; நம்மிடமுள்ள அனைத்தையும் விற்கக் கட்டளையிடப்படவும் இல்லை. ஆனால், நம் வாழ்வில் தேவசேவைக்கு முதலிடம் கொடுக்குமாறு அவர் நம்மிடம் கேட்கிறார்; பூமியில் தம் ஊழியம் வளர்வதற்கு ஏதாவது செய்யாமல் ஒரு நாளைக்கூட கழிக்க வேண்டாமென்கிறார். அவர் அனைவரிடமும் ஒரேவிதமான ஊழியத்தை எதிர்பார்ப்பதில்லை. அந்நிய தேசத்தில் ஊழியம் செய்ய ஒருவர் அழைக்கப்படலாம்; சுவிசேஷப் பணியைத் தாங்கத் தன்னிடமுள்ளதை விற்குமாறு இன்னொருவர் அழைக்கப்படலாம். இருவரின் காணிக்கையையுமே தேவன் ஏற்றுக்கொள்கிறார். வாழ்க்கையையும் அதன் சகல காரியங்களையும் பரிசுத்தமாக அர்ப்பணிப்பதே அவசியம். இந்த அர்ப்பணிப்பைச் செய்கிறவர்கள் பரலோக அழைப்பைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகிறார்கள். 3 TamChS 141.3

ஆழ்ந்து யோசிப்பதிலும் திட்டமிடுதலிலும் உலகஞானமுள்ள மனிதர்கள் உள்ளனர். எப்போதும் தங்கள் தொழிலைப்பற்றியே சிந்திக்கிற அவர்கள் நித்திய நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஞானவான்களாக முயலவேண்டும். உலக ஆதாயத்தைப் பெறுவதற்கு அவர் முயல்வது போல, பரலோகப் பொக்கிஷத்தையும், தேவனுடைய ஜீவனுக்கு ஒப்பான ஜீவனையும் பெறவும் தன் ஆற்றல் முழுவதையும் அவர் செலவிட்டால், அவரால் எதைத்தான் சாதிக்கமுடியாது? 4 TamChS 141.4

சாதாரண நிலையிலுள்ளவர்கள் தற்கால சத்தியத்தை அறிவிக்கும்படி தேவன் அவர்கள்மேல் அசைவாடுவார். அவர்களில் பலர் தேவ ஆவியால் நெருக்கி ஏவப்பட்டு, இருளிலுள்ளோருக்கு வெளிச்சம் கொடுக்கும்படி அங்குமிங்குமாக விரைகிறார்கள். சத்தியமானது அவர்களுடைய எலும்புகளில் அக்கினியைப்போல இருந்து, இருளிலுள்ளோருக்கு வெளிச்சம் கொடுக்கவேண்டுமென்கிற ஆர்வத்தால் கொழுந்துவிட்டு எரிகிறது. கல்வியறிவில்லாதவர்கள் மத்தியிலிருந்தும் கூட அநேகர் ஆண்டவருடைய வார்த்தையை அறிவிப்பார்கள். பரலோகத்தின் செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுச் செல்லும்படி சிறுவர்களை பரிசுத்த ஆவியானவர் ஏவுவார். அவருடைய தூண்டுதல்களுக்கு இணங்குகிறவர்கள் மேல் ஆவி ஊற்றப்படும். மனிதனுடைய கட்டாயச் சட்டங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு, ஆண்டவருடைய சேனையில் சேருவார்கள். 1 TamChS 141.5