கிறிஸ்தவச் சேவை
8—கிறிஸ்தவ வீரர்களை ஒழுங்கமைத்தல்
ஒழுங்கமைத்தல் மிகவும் அவசியம்
காலம் குறைவாக இருப்பதால், மாபெரும் பணிக்காக நம் படைகளை ஒழுங்கமைக்க வேண்டும். 1 TamChS 100.1
சிறுகுழுக்களாக அமைத்து கிறிஸ்தவ ஊழியத்தைச் செய்யும்படி பாவமறியாதவர் எனக்குக் காட்டினார். 2 TamChS 100.2
தங்களைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் ஊழியம் செய்வதற்கென்று பணிக்குழுக்களை ஒழுங்கமைப்பது ஒவ்வொரு சபையிலும் காணப்படவேண்டும். 3 TamChS 100.3
நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, பயிற்சிபெற்ற குழுக்கள் ஒவ்வொரு நகரத்திலும் காணப்படவேண்டும்; ஒருவர் அல்ல, இருவர் அல்ல; கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை ஊழியத்தில் ஈடுபடுத்தவேண்டும். 4 TamChS 100.4
நம்முடைய திருச்சபைகளில் ஊழியத்திற்கென்று குழுக்களை ஏற்படுத்த வேண்டும். மனிதர்களைப் பிடிக்கிற ஊழியத்தில் ஒவ்வொருவரும் இணையவேண்டும். உலகின் சீர்கேட்டுக்கு தப்பி, கிறிஸ்துவின் இரட்சண்ய அன்பில் சேரும்படி, ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த அவர்கள் முயலவேண்டும். 1 TamChS 100.5
நற்செய்தி ஊழிய நோக்கங்களுக்காகவே கிறிஸ்துவின் சபை பூமியில் ஒழுங்கமைக்கப்பட்டது. உயர்ந்தோரும் தாழ்ந்தோரும், ஏழைகளும் பணக்காரரும் சத்தியத்தின் செய்தியைக் கேட்கும்படிக்கு அதற்கானவழிவகைகளை திருச்சபை காணவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். 2 TamChS 101.1
சபையில் அதிக எண்ணிக்கையிலான அங்கத்தினர்கள் இருந்தால், அவர்கள் சபை விசுவாசிகளுக்கு மட்டுமல்ல, அவிசுவாசிகளுக்கும் ஊழியம் செய்யும்படி அவர்களை சிறு குழுக்களாகப் பிரிக்கவேண்டும். சத்தியம் தெரிந்தவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே ஓரிடத்தில் இருந்தால், ஓர் குழுவாக மாறி அவர்கள் ஊழியம் செய்யவேண்டும்.3 TamChS 101.2
யுத்தக்களத்தில் வெற்றிபெற எவ்வாறு ஒழுங்கும் கிரமுமாகச் செயல்படவேண்டுமோ, அதைவிட அதிகமாக நாம் ஈடுபட்டுள்ள போராட்டத்தில் செய்யவேண்டும். ஏனென்றால், நாம் ஈடுபட்டுள்ள போராட்டமானது மதிப்பும் மேன்மையும் வாய்ந்த ஒன்றிற்கான போராட்டம்; எதிரிப்படைகள் போர்க்களத்தில் செய்யும் யுத்தம் போன்றதல்ல, நித்திய நலன்கள் சம்பந்தப்பட்டது. 4 TamChS 101.3
தேவன் ஒழுங்கின் தேவனாயிருக்கிறார். பரலோகத்தோடு தொடர்புடைய ஒவ்வொன்றும் பரிபூரண ஒழுங்குடன் உள்ளது. அங்குமிங்கும் செல்கிற தூத சேனைகளும்கூட கீழ்ப்படிதலோடும் பூரண ஒழுங்கோடும் நடந்துகொள்கிறார்கள்.செயலில் ஒழுக்கமும் இசைவும் இருந்தால்மட்டுமே வெற்றி கிடைக்கும். அவருக்காக உழைக்கும் அனைவரும் கவனத்தோடும் ஒழுக்கத்தோடும் ஞானத் தோடும் வேலைசெய்ய வேண்டும். அவர் அங்கீகரித்து முத்திரை போடுவதற்கு ஏற்றபடி, அவருடைய வேலையை விசுவாசத்தோடு குறையில்லாமல் நாம் செய்யவேண்டுமென்று அவர் விரும்புகிறார். 5 TamChS 101.4
திருச்சபை அங்கத்தினர்கள் பிறருக்கு வெளிச்சம் கொடுக்கிற விதத்தைப் புரிந்துகொள்ளவும், அதன்மூலம் தங்களுடைய விசுவாசத்தைப் பெலப்படுத்தி அறிவைப் பெருக்கவும், சபைப் பணிகளை சரியான ஒழுங்கமைப்புடன் செய்யவேண்டும். தேவனிடத்திலிருந்து பெற்றதை மற்றவர்களுடன் பகிரும்போது, விசு வாசத்தில் உறுதிப்படுவார்கள். செயல்படுகிற சபைதான் உயிருள்ள சபை. நாம் ஜீவனுள்ள கற்களாகக் கட்டப்படுகிறோம். ஒவ்வொரு கல்லும் வெளிச்சம் வீசவேண்டும். தேவனுடைய மகிமையைப் பெற்று, அதைப் பிரதிபலிக்கிற விலையுயர்ந்த கல்லுக்கு ஒவ்வொரு கிறஸ்தவனும் ஒப்பிடப்படுகிறான். 1 TamChS 101.5