கிறிஸ்தவச் சேவை

72/289

ஊழியரின் கடமை

நம் திருச்சபைகளின் அங்கத்தினர்களுக்கு ஊழியர்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த உதவி பிரசங்கம் செய்வது அல்ல; மாறாக, அவர்கள் வேலை செய்வதற்கான திட்டம் வகுப்பதாகும். மற்றவர்களுக்காகச் செய்ய வேண்டிய ஏதாவது வேலையை ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும். கிறிஸ்துவின் கிருபையைப் பெற்றவர் கிறிஸ்துவுக்காகப் பணியாற்றவேண்டிய அவசியத்தை அனைவரும் கண்டுகொள்ள உதவுங்கள். வேலைசெய்யும் விதத்தை அனைவருக்கும் கற்றுக்கொடுங்கள். குறிப்பாக, தேவனுடைய உடன் ஊழியர்களாக எவ்வாறு பணியாற்ற வேண்டுமென்பதை புதிய விசுவாசிகளுக்குக் கற்றுக்கொடுங்கள். 4 TamChS 97.3

கிறிஸ்துவை அறியாதோருக்கு தனிப்பட்ட விதத்தில் ஊழியம் செய்ய மக்களை வழி நடத்துகிற சத்தியங்களைப் பிரசங்கியுங்கள். தனிப்பட்ட முயற்சியை ஒவ்வொரு விதத்திலும் ஊக்கப்படுத்துங்கள். 5 TamChS 97.4

திருச்சபை அங்கத்தினர்கள் ஆவிக்குரிய வளர்ச்சியைப் பெறுவதற்கு,தேவன் சுமத்தியுள்ள பாரத்தை அதாவது,ஆத்துமாக்களை சத்தியத்திற்குள் வழிநடத்த வேண்டுமென்கிற பாரத்தைச் சுமக்க வேண்டுமென ஊழியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். கடமையை நிறைவேற்றாதவர்களைச் சந்திக்கவேண்டும்; அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும்; அதிக முயற்சி எடுக்கவேண்டும். ஊழியர் பார்த்துக் கொள்வார் என்று மக்கள் உங்களைச் சார்ந்திருக்க அனுமதிக்காதீர்கள். மாறாக, தங்களைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்கும்படி தாலந்துகளைப் பயன்படுத்த அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, பரலோகத் தூதர்களும் ஒத்துழைப்பார்கள். தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ள உதவுவார்கள். 1 TamChS 97.5

விசுவாசிகள் சிலர் இருக்கிற பகுதியில் ஊழியம் செய்யும்போது, அங்குள்ள அவிசுவாசிகளை மனமாற்ற ஊழியர் முதலில் முயலக்கூடாது. தன்னோடு ஒத்துழைத்து வேலை செய்ய நம் அங்கத்தினர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.அங்கத்தினர்கள் மேல் தனிப்பட்ட அக்கறை காண்பித்து, அவர்கள் ஆழமான அனுபவத்தைப் பெறவும், மற்றவர்களுக்காக சேவை செய்யவும் அவர்களை வழி நடத்த வேண்டும். ஜெபத்தாலும் பிரயாசத்தாலும் ஊழியரைத் தாங்குமளவிற்கு அவர்கள் பக்குவப்பட்டுவிட்டால், ஊழியருடைய முயற்சிகளுக்கு அதிக வெற்றிகிடைக்கும். 2 TamChS 98.1

ஒரு விதத்தில் பார்த்தால், ஒரு பணியாளர் குழுவின் தலைவனைப் போன்ற நிலையில் போதகர் இருக்கிறார்; ஒரு கப்பற்குழுவின் தலைவனைப் போன்ற பதவியில் இருக்கிறார். தங்களுக்குக் கீழுள்ளவர்கள் அவரவர் வேலையை சரியாக, துரிதமாகச் செய்கிறார்களா என்று பார்ப்பதுதான் இந்தத் தலைவர்களுடைய பணி. அவசர நிலையின் போதுதான் இவர்கள் தாங்களே செயல்படுவார்கள். ஒருமுறை ஒரு பெரிய ஆலையின் உரிமையாளர், தன்னுடைய கண்காணிப்பாளர் ஆலையின் சக்கரப்பகுதியில் எதையோ பழுது பார்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்தார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் ஆறு பேர், எதுவும் செய்யாமல் அங்கே நின்றிருந்தார்கள். அநியாயமாக எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக அதுபற்றி நன்கு கேட்டறிந்து கொண்ட முதலாளி, அந்தக் கண்காணிப்பாளரை தன் அலுவலகத்திற்கு அழைத்தார். அவருக்குரிய சம்பளம் முழுவதையும் கொடுத்து, அவரை வேலையிலிருந்து நீக்கினார். ஆச்சரியமடைந்த கண்காணிப்பாளர் அதற்கான விளக்கம் கேட்டார். அப்போது முதலாளி சொன்னது இதுதான்: “ஆறு பேரை வேலைவாங்குவதற்காக உங்களைப் பணிக்கு அமர்த்தி னேன். ஊழியர்களும் சுயாதீன ஊழியர்களும் ஒத்துழைத்தல் TamChS 98.2

ஆறுபேரில் யார் வேண்டுமானாலும் நீங்கள் செய்த வேலையைச் செய்திருக்க முடியுமென்பது தெரிகிறது. ஆறு பேரைச் சோம்பேறிகளாகவைத்திருப்பதற்காக, ஏழு பேர் சம்பளத்தை என்னால் கொடுக்கமுடியாது” என்று முதலாளி விளக்கம் கொடுத்தார். TamChS 99.1

சில சூழ்நிலைகளுக்கு இந்தச் சம்பவம் பொருந்தும்; சிலவற்றுக்குப் பொருந்தாது. திருச்சபையின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணிகளில் சபை அங்கத்தினர்கள் அனைவரையும் எவ்வாறு ஈடுபடுத்த வேண்டுமென்பது போதகர்கள் பலருக்குத் தெரியவில்லை; அல்லது, அதற்காக முயற்சிப்பதில்லை. தங்களுடைய மந்தையை ஊழியத்தில் ஈடுபடுத்துவதில் போதகர்கள் தங்களுடைய முழுக் கவனத்தையும் செலுத்தினால், அதிகமாகச் சாதிக்கலாம், வேத வாசிப்புக்கும் வீடுசந்திப்புக்கும் அதிகநேரம் கிடைக்கும்; சச்சரவுக்கான காரணங்களையும் தவிர்க்கலாம். 1 TamChS 99.2