கிறிஸ்தவச் சேவை

64/289

6—பயிற்சியின்போதே மாணவர்கள் ஊழியம் செய்யவேண்டும்

கல்வியின் நோக்கம்

மெய்யான கல்வி என்பது நற்செய்தி ஊழியத்திற்கான பயிற்சியாகும். தேவனுடைய ஒவ்வொரு குமாரனும் குமாரத்தியும் ஒரு நற்செய்தியாளராக அழைக்கப்பட்டிருக்கிறார். தேவனுக்கும் நம் சகமனிதர்களுக்கும் சேவை செய்ய நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்மை இந்தப் பணிக்குத் தகுதிப்படுத்துவதே நம் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். 1 TamChS 90.1

சத்துருவின் சோதனைகளிலிருந்து வாலிபர்கள் தங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாம் பள்ளிகளை நிறுவியிருக்கிறோம். இந்த வாழ்க்கையில் பயனுள்ளவர்களாக விளங்கவும், நித்திய காலம் முழுவதும் தேவனுக்குச் சேவை செய்யவும் அங்கே தகுதி பெறலாம். 2 TamChS 90.2

அறியாமையிலும் அழிவிலும் இருப்பவர்களுக்கு ஊழியம் செய்வதற்காக ஞானம்பெற கடுமையாக முயல்கிறவர், மனுக்குலத்திற்கான தேவனுடைய மகத்தான நோக்கத்தை நிறைவேற்றுவதில் தன் பங்கைச் செய்கிறார். பிறருக்கு ஆசீர்வாதமாக சுயநலமற்ற சேவையைச் செய்வதால், கிறிஸ்தவக்கல்வியின் உயரிய இலக்கை எட்டுகிறார். 1 TamChS 90.3

உறுதியும், அர்ப்பணிப்பும், சுயதியாகமும் உள்ள வாலிபப் பெண்களையும் ஆண்களையும் ஆண்டவர் அழைக்கிறார்; அவர்கள் முன்செல்லுவார்கள்; சில காலம் பள்ளியில் பயிற்சிபெற்று, உலகத்திற்கு செய்தியை அறிவிக்க ஆயத்தத்தோடு புறப்பட்டுச் செல்வார்கள். 2 TamChS 91.1