கிறிஸ்தவச் சேவை

58/289

அறிவுரையை மாற்றி அமையுங்கள்

தேவநோக்கத்தைச் பயனுள்ள வகையில் செய்துவருகிற கனமிகுந்த ஊழியர்கள் எத்தனைபேர், வாழ்க்கையில் மிகச்சாதாரண கடமைகளுக்கு மத்தியில் பயிற்சிபெற்றிருக்கிறார்கள்! எகிப்தின் அடுத்த அரசனாகிற நிலையில் இருந்தான் மோசே. ஆனால் அவன் ராஜாவின் அரண்மனையில் இருந்த அதே நிலைமையில்,அவனை அழைத்து, அவனுக்கு நியமித்த பணியை அவனிடம் தேவன் பொடுக்கவில்லை. நாற்பது வருடங்கள் உண்மையுள்ள மேய்ப்பனாக இருந்த பிறகுதான் தன்னுடைய மக்களை விடுதலை செய்ய அனுப்பினார். இஸ்ரவேலின் சேனைகளை விடுவிக்கிற தேவனுடைய கரத்தின் கருவியாக இருக்கும்படி போரடிக்கும் களத்திலிருந்து கிதியோனை எடுத்தார். கலப்பையை விட்டு விட்டு, தேவனுடைய கட்டளையை நிறைவேற்ற வரும்படி எலிசாவை அழைத்தார். நிலத்தைப் பண்படுத்துகிற ஒரு தோட்டக்காரனாக இருந்த போது தான் ஆமோசிடம் அவன் அறிவிக்க வேண்டிய செய்தியைக் கொடுத்தார். கிறிஸ்துவின் உடன் ஊழியர்களாக மாறுகிற அனைவருமே கடினமான, பார்ப்பதற்குத் தகுதியாயிராத வேலையைச் செய்யவேண்டியிருக்கும். ஞானமாக யோசித்து, அவர்களுக்குப் போதிக்கவேண்டும். அவர்களுடைய தனிப்பட்ட குணநலன்களையும்,அவர்கள் செய்யப்போகும் பணியையும் உணர்ந்து, அவற்றுக் கேற்றபடி, போதனைகளை மாற்றிச் சொல்லவேண்டும். 2 TamChS 85.1