கிறிஸ்தவச் சேவை

49/289

குற்றம் எனும் தொற்றுநோய்

குற்றும் எனும் தொற்று நோய்க்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிந்திக்கிறவர்களும் தேவபயமுள்ளவர்களும் அதைப்பார்த்து திகிலடைகிறார்கள். எங்கும் காணப்படுகிற சீர்கேடானது மனிதர்கள் விவரித்து எழுதமுடியாத அளவுக்கு ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. அரசியல் சச்சரவுகள், லஞ்சம், மோசடி பற்றிய செய்திகளை ஒவ்வொரு நாளும் புதிதுபுதிகாகக் கேட்கிறோம். வன்முறை, சட்டத்தை மீறுதல், மனிதரின் பாடுகளில் அக்கறையின்மை, மனித உயிர்களை மிருகத்தனமாகவும் கொடுமையாகவும் பறித்தல் போன்ற மனதைப் பிழிகிற சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன. மனக்கோளாறும், கொலையும், தற்கொலையும் அதிகரிப்பது அனுதின நிகழ்வாகிவிட்டது. மனதைத் திசை திருப்பவும், கெடுக்கவும், சரீரத்தைக் கெடுத்து அழிக்கவும் மனிதர்கள் மத்தியில் சாத்தானுடைய முகவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை யார்தான் சந்தேகிக்கமுடியும். 3 TamChS 75.2

அராஜக மனநிலை எல்லாத் தேசங்களிலும் ஊடுருவியுள்ளது. கட்டுப்படுத்தப்பட்டிருந்த தீமைகளான உணர்ச்சிவெறியும் ஒழுங்கின்மையும் கட்டவிழ்க்கப்ட்டதும், அவை உலகத்தில் வேதனையும் அழிவும் உண்டாக்கும்படி வெளிப்பட்டு, உலகமக்களைப் பீதியடையச் செய்கின்றன. பிரளயத்துக்கு முந்தின உலகம்பற்றி வேதாகமம் காட்டுகிற காட்சியானது, இன்றைய சமுதாயம் வேக மாக நெருங்கிக்கொண்டிருக்கிற நிலையை அப்படியே எடுத்துக் காட்டுகிறது. முற்காலத்தில் பாவிகள் எதற்காக அழிக்கப்பட்டார்களோ, அதேவித குற்றங்கள் இப்போதுங் கூட, இந்த நூற்றாண்டிலும், கிறிஸ்தவ நாடுகளில், தினமும் மிகக்கொடுமையாக அரங்கேறி வருகின்றன. மக்கள் மனந்திரும்பும்படி வழிநடத்தப்படவும், அதன்மூலம் வரவிருந்த அழிவிலிருந்து தப்பவும், ஜலப் பிரளயத்திற்கு முன்பாக உலகத்தை எச்சரிக்கும்படி தேவன் நோவாவை அனுப்பினார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக் காலம் நெருங்கி வருவதால், அந்த மாபெரும் நிகழ்வுக்காக ஆயத்தப்படும்படி உலகத்தை எச்சரிக்க, தேவன் தம் ஊழியர்களை அனுப்புகிறார். திரளானவர்கள் தேவனுடைய பிரமாணங்களை மீறிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் தம்முடைய பரிசுத்த கட்டளைகளுக்குக் கீழ்ப் படியும்படிதம் இரக்கத்தால் அவர்களை அழைக்கிறார். தேவனிடத்திற்கு மனந்திரும்பி, கிறிஸ்துவை விசுவாசித்து தங்கள் பாவங்களை விட்டு விடுகிற அனைவருக்கும் பாவமன்னிப்பு உண்டு. 1 TamChS 76.1

இக்கட்டான காலங்கள் நேரிடப்போவதை இவ்வுலகின் சூழ்நிலைகள் நமக்குக் காட்டுகின்றன. சீக்கிரத்தில் ஒரு பயங்கர சம்பவம் நிகழப்போவதற்கான அறிகுறிகளை தினச்செய்தித்தாள்களில் பார்க்கமுடிகிறது. துணிகர கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. வேலை நிறுத்தப் போராட்டங்கள் சாதாரணமாக நடக்கின்றன. எங்குப்பார்த்தாலும் திருட்டும் கொலையும் காணப்படுகின்றன. பிசாசு பிடித்த மனிதர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்களைக் கொலை செய்துவிடுகிறார்கள். மனிதர்கள் தீமைமேல் தீராத மோகம் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு வகையான தீமையும் நிறைந்து காணப்படுகிறது. 2 TamChS 76.2